மேகதாது விவகாரம் போல் வாய்மூடி இருக்காதீங்க..!! இனி இப்படியொரு துணிச்சல் எவருக்கும் வரக்கூடாது..!! ஸ்டாலின் கடும் கண்டனம்..!!

Stalin vs Vijay 2026

கர்நாடகாவில் 3 தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த கொடூர செயல் கடும் கண்டனத்துக்குரியது.

குற்றம் இழைத்தவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாக தெரிகிறது. இதனை கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.

மேலும், மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழக அரசு கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசு வேலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Read More : அரசுப் பள்ளியில் திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாட்டம்..!! ரீல்ஸ் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய தொண்டர்கள்..!!

Next Post

வெட்கங்கெட்ட ஆபாசநிதி.. அறிவில்லாத அறிவாலயத்தார்..!! உதயநிதியை கிழித்த தவெக ஐடி விங்..!!

Sun Aug 16 , 2026
ஸ்டாலின் மிசாவில் தான் கைதானாரா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியுமா? என்று உதயநிதிக்கு தவெக சவால் விடுத்துள்ளது. இதுதொடர்பாக தவெக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”அரசியலாகவும், கருத்தியல் ஆகவும் மோதும் வக்கும் திராணியும் இல்லையென்றாலும், வாய்ச்சவடால் விடுவதில் மட்டும் ஆபாசநிதிக்கு குறையொன்றுமில்லை. மிசாவில் கைதானவர் அப்பா என்று திமுகவினரும், திமுகவின் அடிவருடிகளும் உருட்டுவதற்கு, இது தாத்தா காலம் என்றெண்ணி வாய்க்கு வந்ததை உளறிக் கொட்டியிருக்கிறார் உளறல்நிதி. என்ன […]
udhayanidhi stalin vijay tvk jpg 2 1

You May Like