13 வயது சிறுமிக்கு மது கொடுத்து.. ஓராண்டாக மாறி மாறி.. தலைமை ஆசிரியரால் வெளிவந்த பகீர்.. சேலத்தை உலுக்கிய சம்பவம்

Rape 2025 5

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்த 13 வயது சிறுமி, கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது தோழிகளுடன் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பூங்காவிற்கு சென்றபோது, அங்கிருந்த சில நபர்கள் அச்சிறுமிக்கு திட்டமிட்டு மது கொடுத்துப் பழக்கியுள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அச்சிறுமியைப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை கூட்டுப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


இந்நிலையில், மாணவியின் நடத்தையிலும், உடல்நிலையிலும் ஏற்பட்ட தீவிர மாற்றங்களை கவனித்த பள்ளி தலைமை ஆசிரியர், உடனடியாக அவரது பெற்றோரை அழைத்து எச்சரித்து விவரத்தை கூறியுள்ளார். இதனால் பேரதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தனர்.

புகாரை தொடர்ந்து போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், 4 பேரை உடனடியாக கைது செய்தனர். மேலும், சிறுமிக்கு மதுபானம் விநியோகித்தது மற்றும் இக்கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் 14 பேரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்துத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More : மக்களை தூங்கவிடாத டவுசர் கேங்..!! நள்ளிரவில் திக் திக்..!! வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

Next Post

தமிழக முதல்வர் விஜய் உள்பட 14 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகள்!. உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சி ரிப்போர்ட்!.

Tue Aug 18 , 2026
நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பத்தாண்டுகளாக நடைபெற்று வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நீதிமன்ற நண்பரும் மூத்த வழக்கறிஞருமான விஜய் ஹன்சாரியா அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். வழக்கறிஞர் சினேகா கலிதா மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த 96 பக்க அறிக்கையில், நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் மீதான குற்ற வழக்குகள் குறித்த பல புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் […]
cm vijay supreme court

You May Like