“சென்னையில் எங்கு பார்த்தாலும் திமுகவின் சாதனைகள் இருக்கும்”!. மு.க.ஸ்டாலின்!

MK Stalin Campaign 2

சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387!

101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் திமுகவின் சாதனைகள் இருக்கும்; திமுகவின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்!

மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ இரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை – நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள்.

சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்!

தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க”! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

ஸ்பெயின் வீரர்களை தாக்கிய அர்ஜென்டினா ஸ்டாருக்கு தடை விதிப்பு!. பிஃபா அதிரடி!.

Sat Aug 22 , 2026
2026 பிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்த பிறகு ஸ்பானிஷ் வீரர்களுடன் களத்தில் மோதலில் ஈடுபட்டதற்காக, அர்ஜென்டினா அணியின் நட்சத்திர மிட்பீல்டர் லியாண்ட்ரோ பரேடெஸுக்கு உலக கால்பந்து அமைப்பான பிஃபா 10 போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளது. மேலும், அவருக்கு 90,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த ஆத்திரத்தில் ஸ்பெயின் வீரர்களுடன் பரேடஸ் கைகலப்பில் ஈடுபட்டதே இந்தக் கடுமையான நடவடிக்கைக்குக் காரணமாகும். இந்தச் சம்பவத்தில் பரேடஸ் […]
LeandroParedes

You May Like