93 வயதிலும் செம ஸ்ட்ராங்! சமீரா ரெட்டியின் தந்தை சொன்ன ஆரோக்கிய ரகசியம் இதுதான்!

sameera reddy and father 600

தமிழ் திரையுலகில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமீரா ரெட்டி. இதைத்தொடர்ந்து சில தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்த அவர், பின்னர் திரையுலகில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், தனது தந்தையின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு சமீரா ரெட்டி பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.


சமீரா ரெட்டியின் தந்தை சிந்தா போலி ரெட்டி 93 வயதை நிறைவு செய்துள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி சமீரா, தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகான உரையாடல் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “93 வயது முடிந்துவிட்டது” எனக் கூறும் அவர், அடுத்த வயதை நகைச்சுவையாக “94 ஓடிக்கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அப்போது, “இத்தனை வயதிலும் உங்களை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்திருப்பது எது?” என்று சமீரா கேட்கிறார். அதற்கு சற்றும் தயங்காமல் பதிலளித்த அவரது தந்தை, “என் மனம், என் மனைவி மற்றும் எனது மூன்று மகள்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, “நான் இன்னும் வலிமையாக இருக்கிறேன்” என்றும் அவர் கூறுகிறார். தந்தையின் இந்த பதிலைக் கேட்டு சமீரா மகிழ்ச்சியுடன் அவருடன் உரையாடுகிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்த சமீரா, தனது தந்தையின் பிறந்தநாளுக்காக ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற வீடியோவை உருவாக்க தான் காத்திருப்பதாகவும், வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து இதை செய்ய வேண்டும் என இறைவனை வேண்டுவதாகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

“தொடர்ந்து ஓடிக்கொண்டே இருங்கள், பாப்பா. 93 வயது. நாங்கள் உங்களை நேசிக்கிறோம்” என்ற அன்பான வாழ்த்துடன் அவர் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு, ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. 93 வயதிலும் தன்னம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் இருக்கும் சமீராவின் தந்தையின் பேச்சும், அவருக்கும் மகளுக்கும் இடையேயான அன்பான உறவும் இந்த வீடியோவை பலரது கவனத்தையும் ஈர்க்கச் செய்துள்ளது.

Also Read: “இது சட்டப்பேரவையா? ரியாலிட்டி ஷோவா?” – சட்டப்பேரவை விவாதங்கள் குறித்து நடிகை கஸ்தூரி விமர்சனம்!

Saranya

Next Post

“எனக்கு புருஷனும் வேணும்.. கள்ளக்காதலனும் வேணும்!” போலீசாரையே திணற வைத்த பெண்!

Tue Aug 25 , 2026
கள்ளக்காதல் விவகாரங்களில் கணவன் அல்லது மனைவிக்கு இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பல நேரங்களில் குடும்பப் பிரச்சினையாக மாறும். ஆனால், உத்தரப் பிரதேசத்தில் கணவர், கள்ளக்காதலன் என இருவருடனும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என பெண் ஒருவர் தெரிவித்த சம்பவம் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டம் மஹ்மூதாபாத்தைச் சேர்ந்தவர் சுபம் வர்மா. இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், […]
WhatsApp Image 2026 08 25 at 2.49.01 PM

You May Like