பல்லாயிரம் கோடி போச்சா..? பரந்தூர் அடுத்த 2ஜியா..? பதற்றத்தில் தீயசக்தி..!! விளாசிய தவெக ஐடி விங்..!!

Vijay 2026 5

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் அமளியில் ஈடுபட்டுனர்.


இந்நிலையில், தவெக ஐடி விங் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், “பல்லாயிரம் கோடி பறந்துபோனதா? பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என்ற அறிவிப்பிற்கு, “தமிழ்நாடு அவ்வளவுதான்” என்று அவதூறு பிரச்சாரம் செய்பவர்களின் கதறலுக்கு காரணம் இருக்கிறது.

பிசினஸ் பார்த்துவிடலாம் என்று கணக்குப் போட்டு, சில லட்சங்கள் போகும் இடங்களை பல கோடிகளாக விலையேற்றி, பல்லாயிரம் கோடி செலவழித்து இடம் வாங்கிப் போட்ட தீயசக்திக்கு, முதல்வரின் இந்த அறிவிப்பு காலில் சுடுதண்ணியை ஊற்றியது போல இருக்கிறது.

இடத்தை வைத்து மடத்தைப் பிடிக்க நினைத்த கதை பொய்த்துப்போனதே என்ற ஒவ்வாமையில், தீயசக்தியுடன் தீர்ந்துபோன சக்தியும் சேர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். களத்தில் இல்லாதவர்கள் போச்சே என்று குமுறிக் கொண்டிருக்கிறார்களாம்.

தீயசக்தியோ, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், துக்கத்தைச் சுமக்க முடியாத பதற்றத்தில் கதறிக் கொண்டிருக்கிறது. இவர்களின் பதற்றத்தைப் பார்த்தால் பரந்தூர் அடுத்த 2ஜியா? என்ற சந்தேகம் வருவதாக தவெக ஐடி விங் தெரிவித்துள்ளது.

Read More : முன்னாள் மனைவியை சங்கிலியால் கட்டிப்போட்டு 5 நாட்களாக பலாத்காரம்..!! பதுங்கு அறையில் வைத்து அரங்கேறிய கொடூரம்..!!

You May Like