பீகார், உ.பி. மாநிலங்களை நெருங்கும் நேபாள பெருவெள்ளம்..!! மத்திய அரசு ‘ஹை அலர்ட்’..!!

Nepal 1

நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் நிலையங்கள், சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உருவாகி நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் கங்கையின் கிளை நதிகளான கோஷி மற்றும் கண்டக் (நாராயணி) ஆறுகளில் வெள்ளநீர் அபாய அளவைத் தாண்டிப் பெருக்கெடுத்து வருவதால், அண்டை மாநிலங்களான பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் முழுவதும் உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


நிலைமையை எதிர்கொள்ள பீகாரில் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் அச்சமடையாமல் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் பீகார் முதல்வர் சம்ராட் சவுத்ரி தெரிவித்துள்ளார். குறிப்பாக பெட்டியா, கோபால்கஞ்ச், முசாபர்பூர் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் தேசிய (NDRF) மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பீகார் முதல்வரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.

அதேபோல், நேபாளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரால் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மஹாராஜ்கஞ்ச் மற்றும் குஷிநகர் மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், மாவட்ட நிர்வாகங்கள் முழு விழிப்புடன் இருக்குமாறு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்திய-நேபாள எல்லையில் உள்ள ‘சாஷ்த்ரா சீமா பால்’ (SSB) பாதுகாப்புப் படையும் மீட்புப் பணிகளுக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேபாளத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் அவசர உதவிகளைப் பெற +977 985 131 6807 மற்றும் +977 970 910 7500 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அந்நாட்டுக்கான இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

Read More : Nepal Floods | நேபாள பெருவெள்ளத்தில் 57 தமிழர்கள் சிக்கித் தவிப்பு..!! பீகார் மாநிலத்துக்கும் உச்சக்கட்ட அலர்ட்..!! பதறவைக்கும் காட்சிகள்..!!

Next Post

BREAKING | நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்..!! விரைந்து மீட்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

Wed Aug 26 , 2026
நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் நிலையங்கள், சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. நேபாள அரசுடன் இணைந்து இந்தியாவும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உள்பட இந்தியர்கள் பலர் […]
CM Vijay Nepal 2026

You May Like