$4 டிரில்லியன் சாம்ராஜ்யம்… 15 வருட சாதனை!. ஆப்பிள் CEO பதவியிலிருந்து விலகினார் டிம் குக்!. நள்ளிரவில் உருக்கமான பதிவு!.

apple ceo tim cook 30kb

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் (CEO) கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த டிம் குக் (Tim Cook), ஆகஸ்ட் 31-உடன் அப்பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். இன்று (செப்டம்பர் 1, 2026) முதல் ஜான் டெர்னஸ் (John Ternus) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய CEO-வாகப் பொறுப்பேற்கிறார்.


தனது கடைசி நாளில் ‘X’ தளத்தில் பதிவிட்ட டிம் குக், “ஆப்பிள் குடும்பத்திற்கு எனது மனமார்ந்த அன்புகள். நாளை எனது பதவி மாறலாம், ஆனால் ஆப்பிள் மீதான என் அன்பு மாறாது. என் நன்றிகள் என்றென்றும் தொடரும்,” எனக் குறிப்பிட்டுள்ளார். CEO பதவியிலிருந்து விலகினாலும், டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் ‘நிர்வாகத் தலைவராக’ தொடர்ந்து செயல்படுவார்.

15 ஆண்டுகால சாதனை பயணம்:

2011-இல் ஸ்டீவ் ஜோப்ஸுக்குப் பிறகு பொறுப்பேற்ற டிம் குக், ஆப்பிள் நிறுவனத்தைச் சிகரத்திற்கு கொண்டு சென்றுள்ளார். ஆப்பிளின் சந்தை மதிப்பு $350 பில்லியனில் இருந்து சுமார் $4 டிரில்லியன் ஆக உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் பங்குகள் 2,359% வரை உயர்ந்துள்ளது. ஆப்பிளின் வருடாந்திர வருவாய் $108 பில்லியனில் இருந்து $400 பில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

ஐபோன் விற்பனை மட்டுமின்றி App Store, Apple Music, Apple Pay போன்ற ‘சர்வீசஸ்’ பிரிவை உருவாக்கி, ஆப்பிள் நிறுவனத்தைப் பிரம்மாண்ட வளர்ச்சிப் பாதையில் செலுத்தியது டிம் குக்கின் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது.

1newsnationuser5

Next Post

உஷார்!. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் விளம்பரங்களில் ஆபத்து!. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

Tue Sep 1 , 2026
இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் தளங்களில் ஆபாச உள்ளடக்கங்கள் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும் போலியான ஆப்ஸ் மூலம், பயனர்களின் ஸ்மார்ட்போன்களை முடக்கி நிதித் திருட்டு நடத்தப்படுவதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்தின் ‘இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்’ (I4C) எச்சரித்துள்ளது. அதாவது, Night Play, Reloop, Kyss, Vimo, Rivo, Nexo, Vixa போன்ற ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என சைபர் பாதுகாப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைதள […]
social media 1 1

You May Like