முதல் இரவில் மனைவி சொன்ன வார்த்தை.. 2 ஆண்டுகள் நீண்ட விவாகரத்து வழக்கு; ரூ.10 லட்சம் இழந்த கணவர்!

Marriage 2025 1

திருமண வாழ்க்கை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஏற்பட்ட பிரச்சினை, ஒரு நபரை இரண்டு ஆண்டுகள் நீண்ட சட்டப் போராட்டத்துக்குள் தள்ளியதாக கூறப்படுகிறது. இறுதியில் வழக்கை முடித்துக்கொள்ள ரூ.10 லட்சம் வரை செலவிட்டதாக அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தகவல் தற்போது பேசுபொருளாகியுள்ளது. விவாகரத்து தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், வழக்கு மேலும் நீண்டால் நீதிமன்றச் செலவுகள் மற்றும் வழக்கறிஞர் கட்டணம் அதிகரிக்கக்கூடும் என அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இதனால், இரு தரப்பினரும் சமரசமாக விவாகரத்தை முடித்துக்கொள்ள முடிவு செய்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார். அதன்படி, பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்து பெறுவதற்காக ரூ.10 லட்சம் தொகையை வழங்கியதாக அவர் கூறியுள்ளார். இந்த தொகையில் இழப்பீடு உள்ளிட்ட செலவுகள் அடங்கியதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இத்தனைக்கும் இந்த திருமண வாழ்க்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

திருமணமான முதல் இரவே மனைவி தன்னுடன் வாழ விருப்பம் இல்லை என்று கூறியதாகவும், அதன் பின்னர் இருவரும் தனித்தனியாக வசித்து வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மனைவியும் வேலை செய்து வருவதாகவும், அவருக்கு சொந்த வருமானம் இருப்பதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இருந்தபோதிலும், திருமண உறவை தொடர முடியாத சூழல் ஏற்பட்டதால் சட்டரீதியாக பிரிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.

விவாகரத்து வழக்கு சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்த நிலையில், நீண்ட சட்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட செலவு மற்றும் மன உளைச்சலை தவிர்க்க இறுதியில் பரஸ்பர சம்மத விவாகரத்துக்கு சென்றதாக அவர் தெரிவித்துள்ளார். குறுகிய காலத்திலேயே முறிந்த திருமணம், அதன்பிறகு நீண்ட சட்டப் போராட்டம், இறுதியில் ரூ.10 லட்சம் செலவு என அவர் பகிர்ந்துள்ள இந்த அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “என் புருஷன் செத்தா தான் நாம சந்தோஷமா இருக்க முடியும்!”.. காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்!

Saranya

Next Post

நள்ளிரவில் கணவர் குடும்பத்தினரை தீ வைத்து கொன்ற இளம்பெண்.. நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Wed Aug 19 , 2026
பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த பரபரப்பான கொலை வழக்கில் மதுரை நீதிமன்றம் தற்போது முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. கணவரின் குடும்பத்தினர் நள்ளிரவில் தீ வைத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான இந்த வழக்கில் இளம்பெண் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது, சம்பவம் நடைபெற்ற விதம், உயிரிழந்தவர்களின் நிலை மற்றும் போலீஸார் சேகரித்த ஆதாரங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. இருதரப்பு வாதங்களும் […]
crime

You May Like