கோவையில் உள்ள பிரபல எஸ்.எஸ்.வி.எம் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுடன் உற்சாகமாகக் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வெற்றிகரமான முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்றிருப்பதால் இயல்பாகவே அதிக எதிர்பார்ப்புகளும் அழுத்தமும் நிலவுவதாக குறிப்பிட்ட அவர், அந்தச் சவாலை விரும்பி ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு நாளும் புதிய பாடங்களைக் கற்றுக்கொண்டு வழிநடத்தி வருவதாகத் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தைப் பற்றி முன்கூட்டியே அதிகமாக யோசிக்காமல், ஒவ்வொரு போட்டியையும் தனித்தனியாக அணுகுவதே தனது பாணி எனக் குறிப்பிட்டார்.
அடுத்த சீசனிலும் சென்னை அணியில் தொடர்வீர்களா எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “உங்களுக்கு என்ன விருப்பம்?” என ருதுராஜ் புன்னகையுடன் எதிர் கேள்வி கேட்டார். அதற்குச் செய்தியாளர், “நீங்கள் சிஎஸ்கே-வில் தொடர வேண்டும்” எனக் கூற, “அப்படியானால் அதுவே எனது பதில்” என்று கூறி தான் சிஎஸ்கே-விலேயே நீடிப்பதை நகைச்சுவையாகவும் தீர்க்கமாகவும் உறுதிப்படுத்தினார். கடந்த சீசனில் அணியின் ஆட்டம் ரசிகர்களுக்குச் சற்றே ஏமாற்றம் அளித்திருந்தாலும், அடுத்த சீசனில் சிஎஸ்கே மிக வலிமையான கம்பேக் கொடுக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார். 2008 முதல் பல்வேறு வெற்றிகளைக் கொண்டாடிய ரசிகர்கள், அணியின் பின்னடைவான காலகட்டங்களிலும் அதே தீவிர ஆதரவைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இளம் திறமையாளரான 13 வயது கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அசுர வளர்ச்சி மற்றும் பேட்டிங் திறமையைப் பாராட்டிய ருதுராஜ், அது இந்தியக் கிரிக்கெட்டிற்கு மிகுந்த உற்சாகமளிப்பதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த சீசனுக்கு சிஎஸ்கே அணிக்குத் தலைமைப் பயிற்சியாளர் நிச்சயமாக நியமிக்கப்படுவார் என்றும், அதற்கான இறுதி முடிவை எட்டுவதற்கு நிர்வாகத்திற்கு இன்னும் போதிய கால அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்தார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டின் இந்த நேர்மறையான பேட்டி, அடுத்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே-வின் அசுர பலத்தைக் காணக் காத்திருக்கும் ரசிகர்களுக்குப் புத்துணர்ச்சியையும் புது நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : விவசாயி வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் விஜய்..!! மூதாட்டிக்கு கூலிங் கிளாஸ் பரிசு..!! வைரல் வீடியோ



