மகனையே ஒழுங்காக வளர்க்காத ஸ்டாலின்..!! கடுமையாக விமர்சித்த அமைச்சர் ரமேஷ்..!!

Ramesh Stalin Udhay 2026

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியான கேள்விகளுக்கு மட்டுமே பதில் கூற முடியும் என்றும், வீட்டில் அமர்ந்துகொண்டு வாய்க்கு வந்தபடி பேசுவதையெல்லாம் தமிழகத்தில் அரசியல் எனக் கருத முடியாது எனவும் அவர் சாடினார்.


முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சி நிர்வாகம் அனைத்துத் தரப்பினரும் போற்றும் வகையில் மிகத் தெளிவாக இயங்கி வருவதாகவும், தமிழர்கள் உலக அளவில் விளையாட்டுத் துறையில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அவர் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். ஆதாரமற்ற விமர்சனங்களை மட்டுமே முன்வைப்பதால் தான், அதிமுகவினரால் எதிர்க்கட்சியாக கூட அமர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

ஜனநாயக ரீதியான போராட்டங்களை யாரும் மறுக்கவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், ஆனால் ஆபாசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசுவதையே எதிர்க்கிறோம் என்றார். “திமுகவினர் ஆபாசமாகப் பேசவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்; அவதூறும் ஆபாசமும்தான் திமுகவின் டி.என்.ஏ. முன்னாள் அமைச்சர்கள் முதல் பலரும் அப்படித்தான் வளர்ந்துள்ளனர். தன் சொந்த மகனையே முறையாக வளர்க்க முடியாத முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ. (மு.க.ஸ்டாலின்), கட்சியை ஒழுங்காக வைத்திருப்பார் என எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்று காட்டமாக விமர்சித்தார்.

மேலும். தமிழகத்தில் நிலவிய மின்வெட்டுப் பிரச்சனை முற்றிலுமாக சரிசெய்யப்பட்டு விட்டதாக மின்துறை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போது மாநிலத்தில் எங்குமே மின்வெட்டு இல்லை எனவும், மக்கள் நிம்மதியாக உள்ள நிலையில் சிலர் அரசியல் ஆதாயத்திற்காகத் தொடர்ந்து பொய்க் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Read More : Zomato-ல் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்த நபர்!. பார்சலை திறந்து பார்த்ததும் காத்திருந்த அதிர்ச்சி!.

Next Post

படுத்த படுக்கையான கணவன்..!! அடிக்கடி வந்த போன கள்ளக்காதலன்..!! ஆணுறுப்பில் சரமாரி தாக்கு..!! மனைவியின் பலே நாடகம்..!!

Mon Sep 14 , 2026
பெங்களூருவில் பக்கவாத நோயால் படுத்த படுக்கையாக இருந்த கணவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக நாடகமாடி, அவரை தனது கள்ளக்காதலன் மற்றும் தாயுடன் இணைந்து மனைவியே கொடூரமாக கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெங்களூரு யெல்லப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த முபாரக் பாஷா (40) என்பவருக்கு திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகின்றன. இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஷாவுக்கு பக்கவாதம் ஏற்பட்டதால் படுக்கையிலேயே […]
Bangalore 2026

You May Like