இன்று தவெக கூட்டணி கட்சிகள் கூட்டம்..? யாரெல்லாம் புறக்கணிப்பு..? அதிரடியாக அறிவித்த கட்சிகள்..!! ஷாக்கில் முதல்வர் விஜய்..!!

TVK 2026

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 தொகுதிகளை கைப்பற்றி, தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலில் காங்கிரஸ் (5 இடங்கள்), விசிக, ஐயூஎம்எல் மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி அரசை அமைத்தது. இந்நிலையில், தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணிக் கட்சிகளின் 2-வது ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (செப். 9) நடைபெற உள்ளது.


இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய தோழமைக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இக்கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டத்தில் பங்கேற்காது என்று அக்கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் மு. வீரபாண்டியன் அறிவித்தார்.

தமிழகத்தில் மதச்சார்பின்மை கொள்கை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மட்டுமே வெளியில் இருந்து தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தொடரும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஏற்கனவே நடைபெற்ற தவெக ஆதரவு கட்சிகளின் முதலாவது கூட்டத்திலும் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளுமே பங்கேற்காமல் புறக்கணித்திருந்த நிலையில், தற்போது 2-வது முறையும் இடதுசாரி கட்சிகள் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது தவெக கூட்டணி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : சட்டசபையில் நான் செய்தது..!! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்..!! பரபரப்பு அறிக்கை..!!

Next Post

வான்வெளியில் பெரும் குழப்பம்!. 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் திடீர் ரத்து!. ஸ்தம்பித்த பிரிட்டன் ஏர்போர்ட்!. பயணிகள் தவிப்பு!

Wed Sep 9 , 2026
பிரிட்டனின் வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பான (NATS) விமானச் செயலாக்க முறைமையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, லண்டன் ஹீத்ரோ, கேட்விக், மான்செஸ்டர் உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் 600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு விமானப் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தரவுகளின்படி, இங்கிலாந்து முழுவதும் 625 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஈசிஜெட் நிறுவனத்தின் 218 விமானங்களும், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் 132 விமானங்களும் மற்றும் பல்வேறு […]
Flight 2026

You May Like