ஒரு தந்தை மகனுக்கு செய்யும் காரியமா இது?.. மகனின் திருமணத்திற்கு சில மணி நேரம் முன் தந்தை செய்த கொடூரம்!

462fd3d9f73627259eed3a599d5ce84611fcea5d0261c83fca17b382361351e3

திருமணத்துக்கு இன்னும் சில மணி நேரங்களே இருந்த நிலையில், மணமகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண வீட்டில் உறவினர்கள் குவிந்திருந்த நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில், இளைஞரின் தந்தையே முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார்.


டெல்லியில் ஜிம் நடத்தி வந்த இளைஞருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி வீட்டில் திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்றன. மெஹந்தி உள்ளிட்ட சடங்குகளும் முடிந்த நிலையில், திருமண ஊர்வலத்துக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன.

இந்த நிலையில், திருமணம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இளைஞர் கொலை செய்யப்பட்டார். நண்பர் ஒருவர் அழைப்பதாகக் கூறிய தகவலின் பேரில் அவர் வீட்டின் அருகே சென்றுள்ளார். அப்போது அங்கு காத்திருந்த அவரது தந்தையும், அவருடன் இருந்த மூன்று பேரும் இளைஞரை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலைக்குப் பிறகு உடலை வீட்டில் உள்ள அறைக்குள் வைத்துவிட்டு நால்வரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். திருமண நிகழ்ச்சிக்காக இளைஞரை குடும்பத்தினர் தேடியபோது, அறைக்குள் அவரது உடல் கிடந்தது. இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இருவரும் சுமார் 7 ஆண்டுகளாக பேசாமல் இருந்த நிலையில், பழைய விரோதம் தொடர்ந்து நீடித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மற்றவர்கள் முன்னிலையில் மகன் தந்தையை அறைந்த சம்பவம் அவருக்கு கடும் அவமானத்தை ஏற்படுத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துக்குப் பழிவாங்கும் நோக்கில் கொலைக்கு திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. திருமணத்துக்கு முன்பாகவே தந்தை தனது திட்டம் குறித்து ச

Also Read: வீட்டில் இந்த 3 வகை படங்களை மட்டும் வைக்காதீங்க!.. வாஸ்து சாஸ்திரம் சொல்லும் முக்கிய எச்சரிக்கை!

Saranya

Next Post

கள்ளக்காதலனுடன் நெருக்கமாக இருந்த தாய்.. நேரில் பார்த்த மகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Fri Sep 11 , 2026
லக்னோவில் சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தாயும் அவரது கள்ளக்காதலரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தை சிறுமி நேரில் பார்த்த நிலையில், அதை வெளியில் சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை தாக்கியதில் உயிரிழப்பு ஏற்பட்டதாக காவல்துறை விசாரணையில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. லக்னோவைச் சேர்ந்த ரோஷினிக்கு கணவர் உள்ளார். கணவர் வீட்டில் இல்லாத நேரங்களில் உதித் என்ற தனது கள்ளக்காதலரை அவர் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். […]
WhatsApp Image 2026 09 11 at 12.48.01 PM

You May Like