திடீர் பல்டி..!! தவெகவுக்கு ஆதரவு இல்லை..!! இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி..!! கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

Communist 2026

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.


அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ.-க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததால், இவ்விரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஆளுங்கட்சியான தவெக, பிரதான எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்கள் வேட்பாளர்களை அறிவித்துத் தீவிர களப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகியவை இணைந்து இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் போட்டியிடுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இதற்கான வேட்பாளர் பட்டியல் வரும் செப்டம்பர் 15 அன்று வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சூழலில், இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்துக் களம் காண்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், இரு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.

Read More : பெரும் அதிர்ச்சி!. நடுக்கடலில் மூழ்கிய இந்தோனேசிய கப்பல்!. 140 பேர் மாயம்; 102 பேர் மீட்பு!. தீவிர தேடுதல் வேட்டை!

Next Post

உஷார்!. பூச்சிக்கொல்லி கலப்படம் எதிரொலி!. கொத்தமல்லி தூள் உட்பட இந்த 2 பொருட்களுக்கு தடை!. FSSAI அதிரடி!

Sun Sep 13 , 2026
பூச்சிக்கொல்லி எச்சம் மற்றும் காட்மியம் கலந்திருப்பது ஆய்வகச் சோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, இரண்டு உணவுப் பொருட்களைத் திரும்பப் பெற இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் தொடர்புடைய தயாரிப்பாளர்கள் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டங்களின்படி பாதுகாப்பற்றவை மற்றும் தரமற்றவை என்று ஆய்வகச் சோதனைகளில் கண்டறியப்பட்டதை அடுத்து, FSSAI இந்த உடனடித் திரும்பப் பெறும் […]
FSSAI 30kb

You May Like