வாழ்க்கையில் கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் நிலை பலருக்கும் ஏற்படுகிறது. இதுபோன்ற நேரங்களில் முயற்சியை மட்டும் அதிகரிப்பது போதாது; நாம் செல்லும் பாதை சரியானதா, நம்முடைய முடிவு சரியான நேரத்தில் எடுக்கப்பட்டதா என்பதையும் சுயமாக மதிப்பீடு செய்ய வேண்டும்.
வாழ்க்கை, குடும்பம், நட்பு, பணியிடம் என பல்வேறு சூழல்களில் மனிதர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சாணக்கிய நீதியில் பல கருத்துகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக இலக்கை நோக்கி பயணிக்கும் ஒருவர் தனது முடிவுகளை அவ்வப்போது மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் சாணக்கியரின் கொள்கைகள் வலியுறுத்துகின்றன.
முதலில், “இந்த முடிவை எடுக்க இதுதான் சரியான நேரமா?” என்று உங்களிடம் நீங்களே கேட்க வேண்டும். ஒரு நல்ல முடிவை தவறான நேரத்தில் எடுப்பதும் எதிர்பாராத சிக்கல்களை உருவாக்கலாம். சூழ்நிலைகள் சாதகமாக இல்லாதபோது அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது முக்கியம்.
அடுத்ததாக, “என்னுடன் உண்மையாக இருப்பவர்கள் யார்?” என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நமக்கு வெற்றி கிடைக்கும் நேரத்தில் மட்டும் உடன் இருப்பவர்களையும், பிரச்சினைகள் வரும்போதும் ஆதரவாக நிற்பவர்களையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டியது அவசியம். சுயநலத்துக்காக பழகுபவர்களுக்கும் உண்மையான நண்பர்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை அறிந்திருப்பது வாழ்க்கையில் முக்கியமானது.
மூன்றாவது கேள்வி, “நான் இருக்கும் இடமும் பணிச்சூழலும் எனக்கு ஏற்றதா?” என்பதாகும். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இல்லாத இடத்தில் தொடர்ந்து முயற்சி செய்வது எதிர்பார்த்த பலனை தராமல் போகலாம். பாதுகாப்பு, வருமான வாய்ப்பு, பணிக்கு கிடைக்கும் மதிப்பு உள்ளிட்ட அம்சங்களையும் கருத்தில் கொண்டு சூழலை மதிப்பிட வேண்டும்.
இதனுடன், வருமானம் எங்கிருந்து வருகிறது, செலவுகள் எவ்வாறு செல்கின்றன? என்பதையும் தெளிவாக கணக்கில் வைத்திருக்க வேண்டும். சம்பாதிக்கும் அளவை மட்டும் பார்க்காமல், பணத்தை எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதும் எதிர்கால வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அடுத்த முக்கியமான கேள்வி, “நான் யார்?” என்பதாகும். ஒருவரின் பலம், பலவீனம், திறமை, குறைபாடு ஆகியவற்றை அவர்
Also Read: ஹோட்டல் ஸ்டைல் குழம்பு வீட்டிலேயே செய்யணுமா? இந்த சமையல் நுணுக்கங்களை ட்ரை பண்ணிப் பாருங்க!



