Flash : இசக்கி சுப்பையா MLA பதவியை ராஜினாமா செய்தார்..! அதிமுகவில் விழுந்த 4-வது விக்கெட்..! ஷாக்கில் இபிஎஸ்..!

isakki subbaiya resign

தமிழ்நாட்டில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ள நிலையில் தற்போது 4 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.. முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.. இதனால் திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.


அதிமுக எம்.எல்.ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்ததால் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் மேலும் சில எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யவிருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இந்த நிலையில் அதிமுகவில் இருந்து 4 எம்.எல்.ஏவாக இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ய வந்தார்… சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.. எனினும் அவர் தட்டச்சு செய்து கொண்டு வரப்பட்ட ராஜிமானா கடிதத்தை கொண்டு வந்ததால் சபாநாயகர் அதனை ஏற்கவில்லை.. கையால் எழுதப்பட்ட கடிதத்தை கொடுக்க வேண்டும் என்பதே சட்டப்பேரவை விதி.. எனவே கைப்பட எழுதிய கடிதத்தை கொண்டு வரும்படி, சபாநாயகர் அறிவுறுத்தினார்.. அதன்படி, ராஜினாமா கடிதத்தை கைப்பட எழுதிய அவர் சபாநாயகரிடம் அளித்தார்..

ராஜினாமா செய்துவிட்டு இவரும் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.. தவெகவில் இணைந்த உடன் அவர் மீண்டும் அம்பாசமுத்திரம் தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..

சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. இதன் மூலம் தவெக அரசின் ஆதரவு எண்ணிக்கை 144ஆக உயர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு தப்பியது..

அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி அணி தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் அதிமுகவில் பெரும் பூகம்படம் வெடித்தது.. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு 22 எம்.எல்.ஏக்களின் ஆதரவும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு 25 எம்.எல்.ஏக்களீன் ஆதரவும் இருந்தது.. இதையடுத்து 29 பேரின் கட்சி பொறுப்புகளையும் பறித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. மேலும் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமித்திருந்தார்..

இந்த சூழலில் நேற்று எஸ்.பி.வேலுமணி தரப்பில் இருந்த 5 எம்.எல்.ஏக்கள் இபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டனர்.. எனினும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதால் இபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது..

Read More : இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் தயாரா இருக்கணுமா CM saar..? விஜய்யை விளாசிய உதயநிதி..!

RUPA

Next Post

இந்த அறிகுறிகள் இருக்கா..? ஆனால் , இதை அலட்சியப்படுத்தினால் அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.!

Tue May 26 , 2026
புற்றுநோய் பலரை அச்சுறுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயால் ஒரு கோடிக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இரண்டாவது பெரிய நோய் இதுவாகும். புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. இரத்தப் புற்றுநோய் அவற்றில் ஒன்றாகும், மேலும் அதன் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று புற்றுநோய் நிபுணர் டாக்டர் வேணுகோபால் கூறினார். அவர் தற்போது மெடிகோவர் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இந்த விவகாரம் குறித்து மருத்துவர் […]
Cancer 2025

You May Like