“இந்த வீடியோவ ஒழுங்கா பாரு…” சிறுமிகளிடம் ஆபாச வீடியோ காட்டி, முதியவர் செய்த காரியம்; அதிர்ச்சியில் பெற்றோர்!

1bdd2fda556045d517c30aab70af5ec5636c619bfbe80b0a464e00f9d80347bd

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 65 வயது நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிகளின் புகாரைத் தொடர்ந்து போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கையில், தலைமறைவாக இருந்த அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


ஊத்தங்கரை அருகே கிராமப் பகுதியில் வசித்து வருபவர் சின்னராஜ் (65). கால்நடை மருத்துவமனையில் பராமரிப்புத் துறை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வீட்டில் இருந்தபோது அப்பகுதியில் விளையாடும் சிறுமிகளிடம் அவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

சம்பவத்தன்று அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்ற சின்னராஜ், அவர்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. மேலும், தனது செல்போனில் ஆபாச வீடியோக்களைக் காட்டியதாகவும் சிறுமிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் அங்கிருந்து தப்பி வீடு திரும்பி, நடந்த சம்பவத்தை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

போலீஸார் விசாரணையைத் தொடங்கியதை அறிந்த சின்னராஜ் அங்கிருந்து தப்பிச் சென்றார். அவரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீஸார் அவரை கைது செய்தனர்.

சின்னராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: 13 மசோதாக்கள்… 12-க்கு ஆளுநர் ஒப்புதல்; ஒன்றில் மட்டும் நீடிக்கும் பரிசீலனை! காரணம் என்ன?

Saranya

Next Post

“ஒழுங்கா அவன்கூட உல்லாசமா இரு...” கல்லூரி மாணவியை தனியாக அழைத்துச் சென்று 4 மாணவிகள் செய்த கொடூரம்!

Fri Sep 18 , 2026
மத்தியப் பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவரை தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்று நான்கு மாணவிகள் தாக்கியதாகவும், அங்கு அவரை மிரட்டி ஒரு ஆண் மாணவருடன் தொடர்பில் இருக்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினருக்கு விவரம் தெரியவந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு அதே கல்லூரியில் படிக்கும் ஆண் மாணவர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து […]
763da64daef2d404b325d152cb086341130471ab7e7e15fecdfa53a11431f040

You May Like