CM விஜய் லண்டன் போனதே வேஸ்ட்..!! 100/100 இது நடக்கும்..!! We The Leaders நிறுவனர் அண்ணாமலை அதிரடி..!!

vijay annamalai e1789901048739

தொழில் முதலீடுகளை ஈர்க்கிறேன் என்ற பெயரில் முதல்வர் விஜய் லண்டனுக்குப் படை திரட்டிச் சென்றிருப்பது காலாவதியான பழைய அரசியல் பாணி என்றும், லண்டன் பொருளாதாரமே தள்ளாடும் நிலையில் அங்கே போய் எதை ஈர்க்க முடியும் என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தனது இயக்கம் மிக விரைவில் முழுமையான அரசியல் கட்சியாக வடிவெடுக்கும் என்பதையும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, ஒரு கூட்டத்தையே லண்டனுக்கு அழைத்துச் சென்று அங்கு சிலரைச் சந்திப்பதும், அதை ஊடகங்களில் பெரிய சாதனையாக காட்டுவதும் வெறும் அரசியல் பகட்டே அன்றி வேறில்லை என்று சாடிய அவர், முதல்வர் விஜய் லண்டன் சென்றதை விமர்சிப்பதை விட, அவர் அங்கு சென்றிருக்கவே கூடாது என்று கூறினார்.

பிரிட்டனின் பொருளாதார நிலைமை தற்போது மிகவும் மோசமாக உள்ள நிலையில், அங்கிருந்து இந்தியாவுக்கு முதலீடுகள் வருவதற்கான சாத்தியங்கள் குறைவு என்றும், சொல்லப்போனால் மகேந்திரா போன்ற முன்னணி இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் லண்டனிலேயே பெருமளவில் முதலீடு செய்து வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் கூறினார்.

சென்னையிலிருந்து வெளிநாட்டு விமானத்தில் லண்டனுக்குப் பறந்து செல்வதற்குப் பதிலாக, உள்நாட்டு விமானத்தைப் பிடித்து கோவை, மதுரை போன்ற தமிழ்நாட்டின் தொழில் நகரங்களுக்கு முதல்வர் வர வேண்டும். இங்குள்ள உள்ளூர் தொழில்முனைவோரையும் உற்பத்தியாளர்களையும் நேரில் அழைத்துப் பேசி, உற்பத்தியை அதிகரித்தால் 50 சதவீத வரியை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற ஊக்கத்தை வழங்கினால், அவர்களே பல மடங்கு முதலீடுகளை கொட்ட தயாராக இருக்கிறார்கள்; வெளிநாடுகளை விட இந்தியப் பொருளாதாரமும் உள்ளூர் சந்தையும் பல மடங்கு வலிமையானது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

வீ தி லீடர்ஸ் புதிய அரசியல் கட்சி உதயமாவது நூற்றுக்கு நூறு உறுதி. இதற்கான முதற்கட்டமாக தேர்தல் மற்றும் நிர்வாகப் பணிகளை ஒருங்கிணைக்க அமைப்புப் பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கட்சி தொடங்குவதற்கான களப்பணிகள், தலைவர்களை உருவாக்குதல் மற்றும் 234 தொகுதிகளிலும் பூத் அளவிலான கட்டமைப்புப் பணிகள் நிறைவடையக் கூடுதல் கால அவகாசம் பிடிக்கும் என ஆரம்பத்தில் கருதியதாகவும், ஆனால் களத்தில் தொண்டர்களின் ஆதரவும் எழுச்சியும் தான் எதிர்பார்த்ததை விடப் பல மடங்கு தீவிரமாக உள்ளதாகவும் தெரிவித்தார். எனவே, எந்தவித மாற்றுக்கருத்துக்கும் இடமின்றி மிகக் குறுகிய காலத்திலேயே அதிகாரப்பூர்வ அரசியல் இயக்கமாக தங்களது படை களம் இறங்கும் என்று அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்தார்.

Read More : தமிழகத்தில் டெங்கு பரவல் அதிகமா..? என்ன செய்ய வேண்டும்..? அமைச்சர் அருண்ராஜ் பரபரப்பு பேட்டி..!!

Next Post

பெரும் துயரம்.. சாலையை கடக்க முயன்ற 3 வயது சிறுவன் மீது கார் மோதி உயிரிழப்பு!

Sun Sep 20 , 2026
குழந்தைகளுடன் வெளியில் செல்லும் பெற்றோர்கள் சாலையோரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஹைதராபாத்தில் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையை கடக்க முயன்ற 3 வயது சிறுவன் கார் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் வயதைக் கருத்தில் கொண்டு, சாலையோரங்களில் அவர்களை தனியாக விடாமல் கையைப் பிடித்தபடி அழைத்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தையும் இந்த சம்பவம் உணர்த்துகிறது. ஹைதராபாத்தின் IS சதன் […]
Accident 2026 2

You May Like