தடுப்புச்சுவரில் மோதி தீப்பற்றிய கார்.. வெளியேற முடியாமல் உயிரிழந்த நரம்பியல் மருத்துவர்!

63a7615c2c0a67b4e875cb7a2e117ff59a69e7f50876c543c90df1f034b82d64

தெலங்கானாவில் நடந்த கோர சாலை விபத்தில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் காருக்குள் சிக்கி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சூர்யாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்ததில் இந்த விபத்து நடந்துள்ளது.


கம்மத்தைச் சேர்ந்த 50 வயதான மருத்துவர் காசாகுர்த்தி ஜெகதீஷ், கம்மத்தில் உள்ள மமதா மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை அவர் தனியாக காரில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

சூர்யாபேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை 365BB-ல் உள்ள பில்லலமர்ரி மேம்பாலம் பகுதியில் காலை 7.15 மணியளவில் கார் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவரில் வேகமாக மோதிய கார், அடுத்த சில நிமிடங்களில் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

மோதலின் தாக்கத்தில் காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்த மருத்துவர் ஜெகதீஷ் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக்கொண்டார். தீ வேகமாக பரவியதால் அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்திருந்தது. மருத்துவரின் உடலும் தீயில் கருகியதால் உடனடியாக அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் காரின் தற்காலிகப் பதிவு எண் மற்றும் சுங்கச்சாவடிகளில் பதிவான வாகனத் தகவல்களை ஆய்வு செய்தனர். விசாரணையின் அடிப்படையில் உயிரிழந்தவர் கம்மத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜெகதீஷ் என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம், வாகனத்தின் நிலை மற்றும் அந்த நேரத்தில் நிலவிய சாலை சூழல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Read: “உடல் எடையை குறைக்க பட்டினி கிடக்கவில்லை” கரீனா கபூர் உடல் எடை குறைத்த ரகசியம் இது தான்..

Saranya

Next Post

“என்கூட உன்னால பேச முடியாதா?”.. ஆத்திரத்தில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்!

Mon Sep 21 , 2026
கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணை பழிவாங்கும் நோக்கில், அவரது வீட்டுக்குச் சென்று பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 34 வயது மோகனா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகனா, கணவர் மாணிக்கம் மற்றும் இரண்டாவது மகளுடன் வசித்து வந்தார். அவர்களது மூத்த மகளுக்கு ஏற்கனவே […]
ce84984212469cff57ddca970d09d6f554701b747662d18250c0576e70eae301

You May Like