சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வரும் நபர், தனது இரண்டாவது மனைவியின் 17 வயது வளர்ப்பு மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து, கருகலைப்பு செய்ய வைத்த கொடூர வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (48). கடந்த 2002-ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர், தற்போது சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் தலைமை காவலராக (ஏட்டு) பணியாற்றி வருகிறார். ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி உள்ள நிலையில், அதனை மறைத்து 46 வயதுடைய மற்றொரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அந்த இரண்டாவது மனைவிக்கு முதல் கணவர் மூலம் 25 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில், தனது வீட்டில் இருந்த 17 வயது வளர்ப்பு மகளுக்கு ஏட்டு வேல்முருகன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதில் கடந்த 2022-ஆம் ஆண்டு அந்த சிறுமி எதிர்பாராதவிதமாக கர்ப்பமடைந்த நிலையில், அரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ரகசியமாக அழைத்துச் சென்று கருகலைப்பு செய்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகும் தனது அதிகார மிரட்டலை பயன்படுத்தி அச்சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.
தொடர்ந்து நடந்த இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மனமுடைந்த அந்த இளம்பெண், கொளத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார். புகாரின் தீவிரத்தை உணர்ந்த காவல்துறையினர் போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஏட்டு வேல்முருகனை உடனடியாகக் கைது செய்தனர். மேலும் அவர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உயர் அதிகாரிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சட்டத்தைக் காக்க வேண்டிய காவலரே வளர்ப்பு மகளை சீரழித்த இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Read More : வடகிழக்கு பருவமழை..!! முதல்வர் விஜய் அவசர ஆலோசனை..!! மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு..!!


