விளையாட்டுப் பிள்ளைகள் நடத்தும் அரசு..! நெல்மணிகளை மழையில் நனையவிட்டு வேடிக்கை பார்ப்பதா? எடப்பாடி பழனிசாமி விளாசல்..!

Eps Vijay 2026

தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைவதை தடுக்க தவறிய தவெக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அனுபவமற்ற விளையாட்டுப் பிள்ளைகளால் வழிநடத்தப்படும் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சியில், விவசாயிகள் எதிர்கொள்ளும் இன்னல்கள் சொல்லி மாளாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக விமர்சித்துள்ளார். டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை குறித்த காலத்தில் அரசு முறையாகக் கொள்முதல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்த அவர், அரைகுறையாகக் கொள்முதல் செய்த நெல்மணிகளையும் போதிய சேமிப்புக் கிடங்கு வசதிகள் இன்றி திறந்தவெளியில் விட்டு மழையில் வீணடித்துள்ளதாக சாடியுள்ளார்.

குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் உள்ள 120 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடப்பற்றாக்குறை காரணமாக திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 5 லட்சம் நெல் மூட்டைகள், தார்ப்பாய் கூட இல்லாமல் கடந்த இரு தினங்களாகப் பெய்த கனமழையில் நனைந்து நாசமாகியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய அலட்சியத்தால் நனைந்து சேதமடைந்த நெல்மணிகள் பின்னாளில் புழுத்துப் போன அரிசியாக மாறி ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கால் விவசாயிகள் ஒருபுறமும், ரேஷன் அரிசியை நம்பியிருக்கும் ஏழை எளிய மக்கள் மறுபுறமும் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சொல் புத்தியும் சுய புத்தியும் இன்றிச் செயல்படும் தவெக அரசைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அரசு சேமிப்புக் கிடங்குகளில் உள்ள நெல் மூட்டைகளைப் பாதுகாக்க உடனடியாக போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Read More : ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த அதிர்ச்சி..!! தனது உதவியாளரை 13 வயதிலேயே சீரழித்த கொடூரம்..!! வளர்ந்த பின் புரோக்கர்..!!

Next Post

மக்களே உஷார்!. இந்த மருந்துகளை அடிக்கடி எடுத்துகொள்கிறீர்களா?. கிட்னியை பாதிக்கும்!. மத்திய அரசு எச்சரிக்கை!

Wed Sep 23 , 2026
மருத்துவர்களின் முறையான வழிகாட்டுதல் இன்றி வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக்குகளை அதிக அளவில் பயன்படுத்துவது நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும் என இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (CDSCO) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரி (DCGI) டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி கையெழுத்திட்டு செப்டம்பர் 21 அன்று வெளியிட்ட இந்தச் சுற்றறிக்கை, மருத்துவர்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் சில முக்கிய […]
cancer tablet warning 11zon

You May Like