சிறையில் ஜெம் வீரமணி… மேலும் இறுகும் பிடி!. சென்னையில் உள்ள வீடு, அலுவலகங்களில் அதிரடி ரெய்டு!

2090324 untitled design 3 1

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி மீதான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், அவருக்கு தொடர்புடைய இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.


சென்னையைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு ஆய்வாளரை தொடர்புகொண்டு ரகசிய புகார் ஒன்றை அளித்தார். அதில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது அலுவலகத்துக்கு வந்து ‘பென்டிரைவ் ஒன்றை கொடுத்ததாகவும், அதில் பல சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்த வீடியோவை ஆய்வு செய்தபோது, வயதான நபர் ஒருவர் 13 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட காட்சி இருந்தது. இதன் அடிப்படையில், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

வீடியோவில் இடம்பெற்றிருந்த முதியவர் பிரபல கிரானைட் தொழில் அதிபரும், ஜெம் குழுமத்தின் தலைவருமான வீரமணி (84) என்பது தெரிய வந்தது. மேலும், வீரமணி தேனாம் பேட்டை பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதன் நிர்வாக பொறுப்புக்களை சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்கனிடம் ஒப்படைத்திருந்தார்.

அந்த வீட் டுக்கு சிறுமிகள் அழைத்து வரப்பட்டு பாலியல் குற்றங்கள் நடைபெற்றதாகவும், மேலும் சில தொழில் அதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு சிறுமிகள் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, ஜெம் வீரமணி வழக்கில் வீடியோ ஆதாரம், பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண்பது உள்ளிட்ட அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஆரம்பகட்ட விசாரணையில் போதிய ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் வழக்கை முடிக்க முயற்சி நடந்ததாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், சிறப்பு போக்சோ நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அதன் பின்னர் விசாரணை வேகமடைந்து, வீரமணி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், வழக்கில் இடம்பெற்ற வீடியோ காட்சிகள் தெளிவாக இல்லை என்ற முன்னாள் அமைச்சர் எஸ்.ரகுபதியின் விளக்கம் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்வினை தெரிவித்து, வீடியோ தொடர்பான விசாரணை மற்றும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இருப்பினும்,  ‘ஜெம்’ வீரமணி பாலியல் வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்தநிலையில் அடுத்த அதிரடியாக வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள அவரது வீடு, அலுவலகம், நிறுவனங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை வீரமணி, அவரது உதவியாளர் சாந்தி, அவரது கணவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

தலிபானுக்கு பயந்து ஆண் வேடமிட்டு பயிற்சி பெற்ற வீராங்கனை!. ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை!

Wed Sep 23 , 2026
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் அடக்குமுறைகளுக்கு நடுவே ஆண் வேடமிட்டு சைக்கிள் பயிற்சி மேற்கொண்டு வந்த ஆப்கான் வீராங்கனை ஃபரிபா ஹாஷிமி (Fariba Hashimi), ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஜப்பானின் நகோயா நகருக்கு அருகில் நடைபெற்ற மகளிர்க்கான சாலை சைக்கிள் பந்தயத்தில் (Women’s Road Race), இத்தாலியில் வசித்து வரும் 23 வயதான ஃபரிபா ஹாஷிமி இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் […]
Taliban fariba hashmi 30kb

You May Like