அதிமுகவின் ஓனர் யார்? திமுகவுக்கு முட்டுக் கொடுப்பது ஏன்? தாராபுரம் பிரசாரத்தில் அனல் பறக்கவிட்ட முதல்வர் விஜய்..!!

CM Vijay 2026 5

தாராபுரத்தில் முதல்வர் விஜய் பிரச்சாரத்தில் பேசுகையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல செயல்பட்டு, திரைமறைவில் கைகோர்த்துக்கொண்டு நாடகமாடி வருவதாக முதல்வர் விஜய் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சர்க்காரியா கமிஷன் விவகாரத்தை தாம் கையில் எடுத்ததும் திமுக எதிர்ப்பு தெரிவிப்பதில் ஒரு நியாயம் உண்டு; ஆனால் எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளும் அதிமுக ஏன் கொதித்தெழுந்து திமுகவுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.


முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் சமீபத்திய பேச்சுக்களைக் கடுமையாகச் சாடிய விஜய், மேடையில் பேசுவதற்கு முன்பாக ஒத்திகை பார்த்துவிட்டு வந்து பொதுமக்களிடம் நடிப்பு காட்டி வருவதாக விமர்சித்தார். கொளத்தூர் தொகுதி மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை ஏதோ பெருமிதம் போலக் கூறிவிட்டு, அதற்கும் தம் மீது பழிபோட்டு தற்போது ஆத்திரத்தில் ஒருமையில் பேச தொடங்கியுள்ளதாக கூறினார். மக்களின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறிக்கொண்டு, பின்வாசல் வழியாக ஆட்சியைக் கவிழ்க்கவும், யாருடன் கூட்டணி வைக்கக்கூடாதோ அவர்களுடன் கள்ளக்கூட்டு வைத்து சதி செய்யவும் இரு கட்சிகளும் திட்டம் தீட்டி வருவதாக அவர் எச்சரித்தார்.

அதிமுக ஆரம்பத்தில் பாஜகவின் கிளையாக இருந்தது; ஆனால் தற்போது திமுகவின் ‘பி-டீமாகவே’ மாறிவிட்டது. திமுக என்ன அறிக்கை விடுகிறதோ, அதை அப்படியே ‘காப்பி – பேஸ்ட்’ செய்வதே அதிமுகவின் வேலையாக இருக்கிறது. இருவருக்கும் எஜமானர் ஒருவர்தான்; வெளியில்தான் இருவரும் எதிர்ப்பது போல வேஷம் போடுகிறார்கள். மக்கள் செல்வாக்கோடு பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்களைக் குதிரை பேரம் என்று கொச்சைப்படுத்துவதை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழியில் இன்று தமிழகத்தில் திமுகவை நெஞ்சுறுதியோடு நேருக்கு நேர் நின்று தில்லாக எதிர்ப்பது விஜய் மட்டும்தான் என்பது எம்.ஜி.ஆர் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றாகவே தெரியும் என்றார். தமக்கும் தமிழக மக்களுக்கும் இடையே இருப்பது தேர்தலை தாண்டிய உன்னதமான பாசப் பிணைப்பு என்றும், அதை எந்தச் சதியாலும் உடைக்க முடியாது என்றும் சூளுரைத்தார். அன்று நடந்தது அம்மா ஆட்சி, அடுத்து நடந்தது அப்பா ஆட்சி, ஆனால் இன்று நடப்பது ‘நம் வீட்டுப் பிள்ளைகளின் உண்மையான ஆட்சி’ என்று குறிப்பிட்ட அவர், மக்களுக்கு நல்லது செய்வதற்காகத் தாம் எந்த எல்லைக்கும் செல்லத் தயார் என்றும், துரோகக் கூட்டணியை மக்கள் தேர்தல் களத்தில் துடைத்தெறிவார்கள் என்றும் முழங்கினார்.

Read More : பணியின் போது அரசு ஊழியர்கள் கையில் எவ்வளவு ரொக்கம் வைத்திருக்கலாம்? தமிழ்நாடு அரசு விளக்கம்..!!

Next Post

இ-கேஒய்சி செய்யவில்லையா? நாளை முதல் ரேஷன் பொருட்கள் நிறுத்தம்..? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Wed Sep 30 , 2026
தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது விரல் ரேகை அல்லது கருவிழிப் பதிவு மூலம் ‘இ-கேஒய்சி’ (e-KYC) சரிபார்ப்பை முடிக்காவிட்டாலும், அவர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தகுதியுள்ள எந்தவொரு குடும்ப அட்டைதாரருக்கும் மாதாந்திர அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை நிறுத்தவோ அல்லது விநியோகிக்க மறுக்கவோ கூடாது என அனைத்து மண்டல உதவி ஆணையர்கள் […]
Ration Shop 2026

You May Like