குட் நியூஸ்..!! கோவில் பெண் பணியாளர்களுக்கு இனி 12 மாதங்கள் மகப்பேறு விடுப்பு! தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!

temple 1 2

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக 12 மாத மகப்பேறு விடுப்பு வழங்க வகை செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், ஓய்வுபெறும் கோவில் பணியாளர்கள் தங்களின் ஈட்டிய விடுப்பை அதிகபட்சமாக 240 நாட்கள் வரை ஒப்படைத்துப் பணப்பலன் பெற்றுக்கொள்ளும் புதிய சலுகையும் அமலுக்கு வந்துள்ளது.


இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருக்கோவில்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் சமூக நலனைக் கருத்தில் கொண்டு, ‘இந்து சமய நிறுவனங்களின் பணியாளர் விதிகள் 2020’-ல் தமிழக அரசு உரிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் திருக்கோவில் பெண் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மகப்பேறு விடுப்பு விவகாரத்தில் அரசு ஊழியர்களுக்கு இணையான சம உரிமை வழங்கப்பட்டு, மகப்பேறு விடுப்புக் காலம் ஓராண்டாக (12 மாதங்கள்) உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், பணி நிறைவு பெற்று ஓய்வுபெறும் கோவில் பணியாளர்கள் தங்களுடைய கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பில் (Earned Leave) அதிகபட்சமாக 240 நாட்கள் வரை ஒப்படைத்து, அதற்கான முழு பணப்பலனைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கோவில் பணியாளர்களின் குடும்பப் பாதுகாப்பு, பணிச் சுமை குறைப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த இரு முக்கிய அறிவிப்புகளும், கோவில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : MLA பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா..!! 2ம் இடம் பிடித்தவர் வெற்றியா? இடியை இறக்கிய ஐகோர்ட்..!!

Next Post

ஜன்னல் கிரிலில் துரு பிடித்துவிட்டதா? பெயிண்ட் அடிக்காமலே வீட்டிலேயே சரிசெய்யலாம்!

Fri Oct 2 , 2026
ஜன்னல் கிரிலில் படியும் துருவை பார்த்தவுடன் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆரம்ப நிலையிலேயே அதை கவனித்தால், வீட்டில் எளிதாகக் கிடைக்கும் சில பொருட்களை வைத்து லேசான துருக் கறைகளை அகற்றி, கிரிலை மீண்டும் சுத்தமாக வைத்திருக்க முடியும். முதலில் கிரிலில் படிந்துள்ள தூசி, சிலந்தி வலை மற்றும் சிறிய குப்பைகளை முழுமையாக அகற்ற வேண்டும். மென்மையான பிரஷ் பொருத்தப்பட்ட வாக்யூம் கிளீனர் இருந்தால் அதை பயன்படுத்தலாம். […]
89bbd68fd51e9d2555012498ffec0073ae7d03cafded203fd139684f205bfe1b

You May Like