தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்டின் (AGS Entertainment) தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்திக்கு தமிழக அரசு புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஆண்டிற்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருவாய் கொண்ட திருக்கோவில்களுக்குப் பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தகுதியான நபர்களை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில் மாநில அளவிலான சிறப்புத் தேர்வு குழு ஒன்றை அமைத்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மயிலம் பொம்மபுரம் ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தலைவராகவும், ஓய்வுபெற்ற நீதிபதி கே.ராமநாதன் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ள இந்த 7 குழு உறுப்பினர்கள் கொண்ட மாநிலத்தில், திரைப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுப்பினராக இடம் பெற்றுள்ளார். மேலும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ப.ரா.சம்பத், சுமதிஸ்ரீ, த.வேல்முருகன் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் இக்குழுவின் பிற உறுப்பினர்களாக செயல்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More : முதலிரவுக்கு மறுத்த மனைவி… ஆடையை விலக்கிப் பார்த்த கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!



