பெரும் சோகம்!. கடல் அலையில் சிக்கி 8 மாணவர்கள் பலி!. சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்!.

Maharashtra students dead

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் உள்ள திவேஅகர் (Diveagar) கடற்கரையில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் 8 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பின் உடல்கள்கள் மீட்கப்பட்டுள்ளன.


புனேவின் ஆலந்தி பகுதியைச் சேர்ந்த தனியார் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள், 17 மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் உட்பட 48 பேர் கொண்ட குழுவினர் மும்பையிலிருந்து சுமார் 170 கி.மீ தொலைவில் உள்ள திவேஅகர் கடற்கரைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.

அப்போது, மாணவர்கள் சிலர் கடலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அலைகளின் சீற்றத்தில் சிக்கி நீரில் மூழ்கினர். உடனடியாக உள்ளூர் மக்களும் அதிகாரிகளும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 8 பேரின் உடல்களையும் மீட்டனர்.

கடலின் ஆழத்தையும் நீரோட்டத்தையும் சரியாக கணிக்க முடியாததே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்கள் அனைத்தும் உடற்கூறாய்வுக்காக பொர்லிபஞ்சதன் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

இடி, மின்னலுடன் பலத்த காற்று..! இன்று முதல் வெளுக்கப்போகும் மழை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்?

Fri Oct 2 , 2026
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, இன்று பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (அக். 2), மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் […]
Heavy Rain 2026

You May Like