இடி, மின்னலுடன் பலத்த காற்று..! இன்று முதல் வெளுக்கப்போகும் மழை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்?

Heavy Rain 2026

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக, இன்று பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி இன்று (அக். 2), மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோல், வட தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

தொடர்ந்து வரும் அக். 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில், தென் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும். அதனைத் தொடர்ந்து, அக். 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் மிதமான மழையும், அக். 7 அன்று மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக லேசானது முதல் மிதமான மழையும் பதிவாக வாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை, இன்று முதல் வரும் 5ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே நீடிக்கும் என்பதால், பெரிய அளவில் வெப்ப அலை வீசுவதற்கோ அல்லது வெயில் அதிகரிப்பதற்கோ வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.

Read More : MLA பதவியை ராஜினாமா செய்த இசக்கி சுப்பையா..!! 2ம் இடம் பிடித்தவர் வெற்றியா? இடியை இறக்கிய ஐகோர்ட்..!!

Next Post

நேபாளத்தில் அடுத்த பேரழிவு!. இமயமலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 15 பேர் பலி!. உலகிற்கு ஓர் எச்சரிக்கை அறிகுறியா?

Fri Oct 2 , 2026
நேபாளத்தில் உள்ள ‘இம்லுங் இமால்’ (Himlung Himal) மலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மேலும் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாகவும், மேலும் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில், நார்பூ பகுதியில் அமைந்துள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள இம்லுங் இமால் மலையின் அடிவார முகாமில் இந்த பனிச்சரிவு […]
nepal avalanche

You May Like