ரூ.1.5 லட்சம் முதலீடு செய்து ரூ.9 கோடி அள்ளிய 32 வயது இளைஞர்! மியூச்சுவல் ஃபண்ட்டில் சாதித்தது எப்படி?

Mutual Fund SIP 2025

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு உலகில் எந்த திட்டம் 20 சதவீதத்திற்கும் அதிகமான அதீத லாபத்தை தரும் என்று தேடி அலைபவர்களே அதிகம். ஆனால், சந்தையின் அதிரடி ஃபண்டுகளையோ, அதிசய லாபங்களையோ நம்பியிருக்காமல், வழக்கமான எளிய முதலீடுகள் மூலமாகவே தனது 32 வயதிற்குள் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான சொத்துகளை உருவாக்கியுள்ளார் புனேவைச் சேர்ந்த இளம் மென்பொருள் பொறியாளர் சுதிர் தண்டோதியா.


இவரது மொத்தச் சொத்து மதிப்பில் ரூ.4.3 கோடி நிதி சார்ந்த சொத்துகளும் (மியூச்சுவல் ஃபண்ட் ரூ.2.56 கோடி, தங்கம் ரூ.64 லட்சம், வங்கி சேமிப்பு ரூ.57 லட்சம் போன்றவை), தற்போது ரூ.4.7 கோடி சந்தை மதிப்புடைய புனேவில் உள்ள வீடும் அடங்கும்.

2017-ல் ஆண்டுக்கு வெறும் ரூ.4.5 லட்சம் சம்பளத்தில் பணியை தொடங்கிய சுதிரின் வருமானம், படிப்படியாக உயர்ந்து தற்போது ஆண்டுக்கு ரூ.52 லட்சமாக அதிகரித்துள்ளது. அவரது மனைவியும் ஐ.டி. துறையில் நல்ல வருவாய் ஈட்டுகிறார். பெரும்பாலானோர் வருமானம் கூடும்போது கார், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் விலையுயர்ந்த விடுமுறை சுற்றுலாக்கள் என தங்களது வாழ்க்கை முறைக்கான செலவுகளை உடனடியாக உயர்த்திவிடுவர்.

ஆனால் சுதிர், ‘வாழ்க்கை முறை பணவீக்கம்’ என்ற மாய வலையில் சிக்காமல், கடந்த நான்கு ஆண்டுகளாக தனது மாதாந்திர குடும்பச் செலவை வெறும் ரூ.2 லட்சத்திற்குள் கட்டுப்படுத்தினார். சம்பள உயர்வு மூலம் கிடைத்த கூடுதல் தொகையை ஆடம்பரத்திற்கு பயன்படுத்தாமல், மாதம் ரூ.1.5 லட்சம் வரை மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி (SIP) முதலீட்டிற்கும், வீட்டுக் கடனை அடைப்பதற்கும் முயன்றார்.

அதிக லாபம் தேடி நேரத்தை வீணடிப்பதை விட, முதலீடு செய்யும் தொகையை அதிகப்படுத்துவதே தனது வெற்றியின் ரகசியம் என்கிறார் சுதிர். 2020 கொரோனா கால கடும் சந்தை வீழ்ச்சியின் போதும், 2022-ன் மந்தமான பொருளாதார சூழலின் போதும் அச்சப்பட்டு முதலீட்டை நிறுத்தாமல், தனது எஸ்.ஐ.பி முறையை தொடர்ந்து செயல்படுத்தியுள்ளார். 15 முதல் 20 ஆண்டுகள் என்ற நீண்டகால இலக்கு இருக்கும்போது குறுகிய கால சந்தை ஏற்ற இறக்கங்களை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்பதை நிரூபித்துள்ள சுதிர், 40 வயதிற்குள் ரூ.25 கோடி நிதி இலக்கை எட்டி விருப்பமான சொந்த தொழிலை தொடங்குவதே தனது உண்மையான ‘நிதி சுதந்திரம்’ என கூறுகிறார்.

Read More : BREAKING | அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு..!! ஆன்லைன் மூலம் விண்ணப்பம்..!! வெளியானது அரசாணை..!!

Next Post

பழைய சாதத்தை சூடு பண்ணி சாப்பிடுறீங்களா? உடலில் பாயும் விஷம்! உணவியல் நிபுணர்கள் பகீர்!

Tue Oct 6 , 2026
பலரது வீடுகளிலும் மதிய உணவுக்குச் சமைத்து மீதமான சாதத்தை இரவிலோ அல்லது மறுநாளோ சூடுபடுத்தி உண்பதும், எலுமிச்சை சாதம், ஃபிரைடு ரைஸ் எனப் புது உணவுகளாக மாற்றிச் சாப்பிடுவதும் வழக்கமாக உள்ளது. ஆனால், சமைத்த சாதத்தைச் சரியான முறையில் கையாளாவிட்டால் அது தீவிர உணவு நஞ்சாதலுக்கு (Food Poisoning) வழிவகுக்கும் என உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சாதத்தைச் சூடுபடுத்துவது மட்டுமே ஆபத்தல்ல; சமைத்த பிறகு அதை […]
rice n

You May Like