கொதிக்கும் பூமி.. உச்சம் தொடும் ‘எல் நினோ’! குளிர்காலமே கிடையாது! உலக வானிலை அமைப்பு பகீர் எச்சரிக்கை!

el nino 1 1

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை இயல்பை விட மிகத் தீவிரமாக அதிகரித்து வருவதால் உருவாகும் ‘எல் நினோ’ (El Nino) வானிலை நிகழ்வு, பூமி இதுவரை கண்டிராத மிகக் கடுமையான வெப்ப அலைகளை ஏற்படுத்தக்கூடும் என உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. மனித நடவடிக்கைகளால் ஏற்கனவே தீவிரமடைந்துள்ள புவி வெப்பமயமாதலுடன் எல் நினோவும் கைகோர்த்துள்ளதால், 1950-ஆம் ஆண்டிற்கு பிறகு பூமி சந்திக்காத ஒரு பேராபத்தான வானிலை மாற்றம் தற்போது உருவாகி வருகிறது.


பசிபிக் பெருங்கடலானது தன்னுள் தேக்கி வைத்திருந்த பிரம்மாண்டமான வெப்ப ஆற்றலை வளிமண்டலத்திற்குள் உமிழ்ந்து வருவதால், உலகளவில் பெரும்பாலான நாடுகள் முன்னெப்போதும் இல்லாத கொடூர வெப்பச் சூழலை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளன. பிரபல வானிலை நிபுணர் ரியான் மாவே வெளியிட்டுள்ள புவி வரைபடத்தில், உலகப் பகுதிகள் முழுவதும் அனல் பறக்கும் சிவப்பு நிறக் குறியீடுகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

அமெரிக்காவை தவிர்த்து உலகெங்கும் புவி வெப்பமயமாதல் மிகக் கடுமையாகப் பதிவாகியுள்ளதால், குளிர்காலத்திலும் இந்த எல் நினோவின் தாக்கம் குறையாது என்றும், இது 2027 பிப்ரவரி மாதம் வரை தொடரக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதே கருத்தை உறுதிப்படுத்தியுள்ள காலநிலை விஞ்ஞானி ஸீக் ஹவுஸ்பாதர், நடப்பாண்டின் எல் நினோ அளவீடுகள் வரலாற்று உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில், 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகின் பெரும்பாலான பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை சராசரியை விட பன்மடங்கு உயர அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக, எல் நினோவின் மையப்பகுதியான பசிபிக் பெருங்கடலில் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தை விட வரலாறு காணாத வகையில் 6.7 டிகிரி பாரன்ஹீட் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. பெருங்கடல்களின் இந்த அபாயகரமான வெப்ப உயர்வு உலகளாவிய பருவமழைப் பொழிவையும், விவசாயத்தையும் அடியோடு புரட்டிப் போடும் அபாயம் எழுந்துள்ளது.

Read More : வணிகர்களுக்கு குட் நியூஸ்! ஜிஎஸ்டி கெடுபிடிகளுக்கு முற்றுப்புள்ளி! புது ரூல்ஸை அறிவித்த நிர்மலா சீதாராமன்!

You May Like