தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுகவில் கடும் உட்கட்சி மோதல் வெடித்துள்ளது.. முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் தலைமையிலான அணி, கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி என அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது..
சட்டமன்றத்தில் கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவை சேர்ந்த 25 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர்.. இதன் மூலம் தவெக அரசின் ஆதரவு எண்ணிக்கை 144ஆக உயர்ந்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அரசு தப்பியது..
அதிமுகவில் இருந்து ஒரு பிரிவுக்கு அமைச்சரவையில் இடம் தரப்படும் என்றால் எங்கள் ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை வரும் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.. அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் ஒரு பிரிவுக்கு அமைச்சரவையில் இடம் தருவதற்கு வாய்ப்பில்லை என்ற தகவல் தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது..
முன்னதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் யாரும் விஜய்க்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்தார்.. ஆனாலும், அதனை மீறி சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்கள் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்தது அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது..
இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கை ஈடுபட்டதாக கூறி, சம்மந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என இபிஎஸ் தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.. மேலும் எம்.எல்.ஏக்களாக உள்ள பலரின் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இபிஎஸ் அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என்ற அடிப்படையில் தவெக அரசுக்கு ஆதரவளித்ததாக கூறப்படுகிறது.. எனினும் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் “ அதிமுகவில் இருந்து ஒரு பிரிவுக்கு அமைச்சரவையில் இடம் தரப்படும் என்றால் எங்கள் ஆதரவு நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலை வரும் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.. அதிமுகவில் இருந்து விலகி இருக்கும் ஒரு பிரிவுக்கு அமைச்சரவையில் இடம் தருவதற்கு வாய்ப்பில்லை என்ற தகவல் தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது..” என்று தெரிவித்தார்
அமைச்சரவை குறித்த தவெகவின் அறிவிப்பால் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.. அதிகாரம், பதவிக்காக அதிமுகவை வேலுமணி தரப்பு பிரிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம்சாட்டி இருந்தது. அமைச்சரவையில் 8 அமைச்சர்கள் வரை அதிமுகவினருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக முதலில் கூறப்பட்டது.. பின்னர் 2 அமைச்சர்கள் அதிமுகவுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.. அந்த அடிப்படையில் தான் தவெக ஆட்சிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் ஆதரவளித்தனர்.. ஆனால் அமைச்சரவையில் அதிமுகவுக்கு இடமில்லை என்று தவெக தரப்பில் கூறப்பட்டதால் எஸ்.பி.வேலுமணி தரப்பு கடும் ஏமாற்றத்தில் உள்ளதாக கூறப்படுகிறது..
Read More : Flash : தமிழக அமைச்சரவையில் விசிக இடம்பெறுமா..? திருமாவளவன் பரபரப்பு பதில்..!



