வெற்றிப் பயணம் திட்டத்தால் ஆண்களுக்கும் ஜாக்பாட்! அதிரடியாக குறைந்த டிக்கெட் கட்டணம்!

TN Bus 2026

தமிழகத்தில் பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாக, மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்பட்ட 340 விரைவு மற்றும் சொகுசு புறநகர் பேருந்துகள் சாதாரண கட்டணப் பேருந்துகளாகத் தரம் மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக மகளிர் இலவசமாகப் பயணிப்பது மட்டுமின்றி, அதே பேருந்துகளில் பயணிக்கும் ஆண் பயணிகளுக்கும் பயண தூரத்திற்கு ஏற்ப ரூ.10 முதல் ரூ.15 வரை டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.


நகர்ப்புறங்களில் இயக்கப்பட்டு வந்த சாதாரண கட்டணப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, தற்போது சொகுசு மாநகரப் பேருந்துகள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர், மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பயணிகள் இந்தச் சிறப்புப் பேருந்துகளை எளிதில் கண்டறியும் வகையில் முகப்பில் ‘வெற்றி பயணம்’ என்ற ஸ்டிக்கர்களும், மின்னணு டிஜிட்டல் பலகைகளும் பொருத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமின்றி மாவட்ட அளவிலும் பெண் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், மாநகர விரைவு மற்றும் சொகுசுப் பேருந்துகள், புறநகர் சாதாரண பேருந்துகள், 40 கி.மீ-க்கு மேற்பட்ட மலைப்பாதை வழித்தடங்கள் எனத் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 12,695 அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், மாவட்டங்கள் மற்றும் முக்கிய நகரங்களை இணைக்கும் 2,390 புறநகர் சாதாரண கட்டணப் பேருந்துகளும் அடங்கும்.

முன்னதாக இப்பிரிவில் 2,050 பேருந்துகள் இயங்கி வந்த நிலையில், மகளிர் பயன்பாட்டிற்காகக் கூடுதலாக 340 விரைவு மற்றும் சொகுசுப் பேருந்துகள் சாதாரணக் கட்டணப் பேருந்துகளாக மாற்றப்பட்டன. இதன் விளைவாக, அப்பேருந்துகளில் பயணிக்கும் ஆண்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.10 முதல் ரூ.15 வரை தானாகவே குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Read More : வணிகர்களுக்கு குட் நியூஸ்! ஜிஎஸ்டி கெடுபிடிகளுக்கு முற்றுப்புள்ளி! புது ரூல்ஸை அறிவித்த நிர்மலா சீதாராமன்!

Next Post

இந்தியன் 3 படத்தின் முதல் போஸ்டர் வெளியீடு!. 'ஜீரோ டாலரன்ஸ்' உடன் களமிறங்கும் சேனாபதி!

Fri Oct 9 , 2026
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘இந்தியன் 3’ படத்தின் அதிகாரப்பூர்வ முதல் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்தியன் 2’ படத்தின் கலவையான விமர்சனங்களுக்குப் பிறகு, தற்போது இயக்குநர் ஷங்கர் இப்படத்தின் அடுத்த பாகமான ‘இந்தியன் 3’ பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில், “சேனாபதி இஸ் பேக் வித் ஜீரோ டாலரன்ஸ். தி ரிசர்ஜென்ஸ் பிகின்ஸ் […]
Indian 3 first poster 30kb

You May Like