கதம் கதம்.. முடிஞ்சது! அமைச்சர்களுடன் இணைந்து முதல்வர் விஜய் செய்த தரமான செய்கை!

CM Vijay 2026

பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.


தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியை அடுத்து சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் திரண்டு பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை அலுவலகம் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த வெற்றியை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல்குமார், அருண்ராஜ் ஆகியோர் தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்து மலர்க்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அமைச்சர்களுடன் உற்சாகமாக உரையாடிய முதல்வர் விஜய், தனது வழக்கமான தனித்துவமான பாணியில் அவர்களோடு சேர்ந்து வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். முதல்வர் விஜய் அமைச்சர்களுடன் உற்சாகமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read More : BREAKING | தமிழகம் ஊழல்வாதிகளின் கோட்டை இல்லை! பணநாயக சூத்திரத்தை அடித்து நொறுக்கிய தேர்தல்! வெற்றிக்கு பின் கர்ஜித்த முதல்வர் விஜய்!

You May Like