பெரும் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. தாராபுரம் தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா, மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோர் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியை அடுத்து சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் திரண்டு பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை […]

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: “தவெகவின் இந்த வெற்றி என்பது பண பலத்திற்கும், அதிகார பலத்திற்கும் கிடைத்த அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையே தவிர மக்கள் அளித்த தீர்ப்பல்ல” என்று சாடியுள்ளார். தோல்வி பயம் காரணமாக ஒட்டுமொத்த அமைச்சரவையையும் களத்தில் இறக்கி, வாக்காளர்களுக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசியும், அதிமுக நிர்வாகிகள் மீது […]

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்திருப்பது துரோகத்திற்கான இடைக்கால வெற்றியே தவிர வேறொன்றுமில்லை; குறுகிய காலத்திலேயே கட்டமைக்கப்பட்ட தவெகவின் பொய் பிம்ப அரசியல் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிந்து 5 மாதங்களுக்குள் இரு சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் ஆளுங்கட்சி தங்கள் […]

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. தவெக வேட்பாளர்கள் சத்தியபாமா, மரகதம் குமரவேல் அபார வெற்றி பெற்றனர். தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: ”மக்கள் மனத்தில் நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கென இருக்கும் முதன்மைச் சக்திக்கான முதலிடமும், நமது மனசாட்சி உள்ள மக்களாட்சி மீதான நம் சொந்தங்களின் ஆழ்மன விருப்பமும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு உள்ளன. ஒரு பைசா […]

தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றிக் கழகம் 2 தொகுதிகளிலும் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்ட நிலையில், த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆரம்பம் முதலே அசைக்க முடியாத முன்னிலை பெற்று வந்தார். இறுதிச் சுற்று முடிவில் அவர் 61,470 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை […]