தட்டம்மை வந்தால் அலட்சியம் வேண்டாம்!. காது கேட்காமல் போகலாம்!. பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்!.

Measles

தட்டம்மை நோய் என்றாலே அதன் கடுமையான பாதிப்புகள் குறித்து பொது சுகாதார நிபுணர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், தட்டம்மை தொற்றால் ஏற்படும் மற்றொரு கடுமையான மற்றும் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து முன்னணி காது கேளாமை மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தட்டம்மை பாதிப்பிலிருந்து மீண்டாலும், சிலருக்கு காது கேளாமை அல்லது நிரந்தரமாக கேட்கும் திறன் குறையும் ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.


பென் ஸ்டேட் ஹெல்த் சிஸ்டத்தின் (Penn State Health System) முன்னணி ஆடியோலாஜிஸ்ட் டாக்டர் ஜில் மெக்லெல்லாண்ட் (Dr. Jill McClelland) இது குறித்துக் கூறுகையில், “தட்டம்மை தொற்று ஏற்படும் போது காது தொற்று மற்றும் நிரந்தரமாகக் கேட்கும் திறன் இழப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. எனவே, நோயாளி தட்டம்மை தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்த பிறகு, காது கேளாமை தொடர்பான எச்சரிக்கை அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதைப் பெற்றோர்கள் தீவிரமாகக் கவனிக்க வேண்டும். எதற்காவது பதில் அளிக்க தாமதிப்பது, பேச்சில் திடீர் மாற்றம் ஏற்படுவது அல்லது தொலைக்காட்சி மற்றும் பொம்மைகளின் ஒலியை வழக்கத்தை விட அதிகமாகக் கேட்கக் கோருவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. எவ்வளவு விரைவில் இதைக் கண்டறிகிறோமோ, அவ்வளவு சீக்கிரம் உரிய தீர்வைப் வழங்க முடியும்” என்றார்.

புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

தட்டம்மை தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் பத்தில் ஒருவருக்குக் காது தொற்று (ear infection) ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஆயிரத்தில் ஒருவருக்கு மூளையழற்சி (Encephalitis) எனப்படும் மூளை வீக்கம் காரணமாக நரம்பு மண்டலம் சார்ந்த நிரந்தரக் காது கேளாமை ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர் மெக்லெல்லாண்ட் எச்சரிக்கிறார்.

பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்:

குழந்தைகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாகச் சொல்ல மாட்டார்கள் என்பதால், பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் சத்தங்களுக்கு முன்பைப்போல் உடனடியாக எதிர்வினை ஆற்றாமல் இருப்பது. இயல்பாக வளர்ச்சியடைந்து வந்த குழந்தைகளின் பேச்சின் வேகம் திடீரென குறைவது அல்லது பேச்சில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது. சற்று பெரிய குழந்தைகளாக இருந்தால், “டிவி சத்தத்தை கூட்டுங்கள், ரேடியோ சத்தத்தை கூட்டுங்கள், நான் சொன்னதை மீண்டும் சொல்லுங்கள்” எனக் கேட்பது.

இந்த அறிகுறிகள் உடனடியாக நிரந்தரக் காது கேளாமை இருப்பதைக் குறிக்காது என்றாலும், தட்டம்மை தொற்றுக்குப் பிறகு இவற்றை எக்காரணம் கொண்டும் அலட்சியம் செய்யக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

நோயாளி தொற்றுப் பரப்பும் நிலையிலிருந்து முழுமையாக விடுபட்ட பிறகு, குடும்ப மருத்துவர் அல்லது காது கேளாமை சிறப்பு மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது காது தொற்றா அல்லது நிரந்தரப் பாதிப்பா என்பதை மருத்துவர்கள் கண்டறிந்து, தேவைப்பட்டால் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களின் உதவியுடன் உரிய சிகிச்சையை வழங்குவார்கள். குழந்தைகளின் பேச்சு, மொழி வளர்ச்சி, மற்றும் சமூகத் தொடர்புகளுக்குக் காது கேட்பது மிகவும் இன்றியமையாதது என்பதால், ஆரம்ப நிலையிலேயே இதைக் கண்டறிவது அவசியமாகும்.

1newsnationuser5

Next Post

" உச்சநீதிமன்றத்தை அரசியல் களமாக மாற்ற முடியாது"!. இந்தியா கூட்டணி பேரணி குறித்து தலைமை நீதிபதி எச்சரிக்கை!.

Mon Oct 12 , 2026
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்க்கட்சியான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத்தை நோக்கிப் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தை “அரசியல் களமாக மாற்ற முடியாது” என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தொடர்பான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) விவகாரத்தில் முறைகேடுகள் இருப்பதாகக் கூறி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன […]
justice suryakant 1

You May Like