BIG BREAKING | தமிழ்நாட்டுக்கு முழு நேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமனம்! ஜனாதிபதி உத்தரவு!

tn governor arlegar

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்பட நாட்டின் 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.


குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பல்வேறு மாநில ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், புதிய ஆளுநர்களும் பொறுப்பேற்க உள்ளனர்.

அதன்படி, தற்போது கேரள மாநில ஆளுநராக பதவி வகித்து வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்கிம் மாநில ஆளுநராக உள்ள ஓம் பிரகாஷ் மாத்தூர் கேரள மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநில புதிய ஆளுநராக டாக்டர் சுதா யாதவ் அவர்களும், ஒடிசா ஆளுநராக பிரிஜ் மோகன் ராம் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் மாநில ஆளுநராக டாக்டர் தல் சிங் பிசேன் மற்றும் சிக்கிம் மாநில புதிய ஆளுநராக துஷ்யந்த் கவுதம் ஆகியோர் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Read More : உயிரை பணயம் வைத்து சேவையாற்றியவர்களை தவிக்கவிடலாமா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை குட்டு!

You May Like