ஒரு வாரத்துக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களுக்கு அலர்ட்? லிஸ்டில் உங்க ஊர் இருக்கா?

Rain 2026

நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்குப் பருவமழை அடுத்த இரு தினங்களில் முழுமையாக விலக உள்ளதாகவும், தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை கடலோரத்தை ஒட்டி 3.1 கி.மீ உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் அங்கிருந்து மத்திய வங்கக்கடல் வரை நீடிக்கும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஏழு தினங்களுக்கு பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 13 (இன்று):

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகும்.

அக்டோபர் 14 (நாளை):

தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், டெல்டா பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 21 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் மிதமான மழை நீடிக்கும்.

அக்டோபர் 15:

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை மலைப்பகுதிகள், மற்றும் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை ஆகிய 17 மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசுவதுடன் கனமழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.

அக்டோபர் 16:

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 19 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்க்கும். பிற இடங்களில் மிதமான மழை தொடரும்.

அக்டோபர் 17:

வட மற்றும் உள் மாவட்டங்களான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்றுடன் பலத்த மழை வெளுத்து வாங்கும்.

அக்டோபர் 18:

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்கள், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 19:

காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 18 மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை நீடிக்கும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான பிரத்யேக எச்சரிக்கை ஏதுமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : வங்கக்கடலில் திடீர் திருப்பம்! அடுத்த 48 மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்! தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!

Next Post

அதிமுக எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பணம் இல்லாததால் மின்சாரத்தில் ஊழலா? விளாசிய ஸ்டாலின்!

Tue Oct 13 , 2026
தவெக ஆட்சி அமைந்த 4 மாதங்களில் பணவீக்கத்திலும், விலைவாசி உயர்விலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார். இவர்களுக்கு, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்கத் தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. விலைவாசி உயர்வே ஏற்படவில்லை என உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யை கேட்டு ஏழை மக்கள் இன்னும் எரிச்சலில் இருக்கிறார்கள். மின்வெட்டு குறித்தும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடந்த பல மாதங்களாக எச்சரித்து வந்தோம். […]
Stalin 2026

You May Like