நாளை விடைபெறுகிறது.. ஆரம்பமும் ஆகிறது! தமிழகத்துக்கு உச்சக்கட்ட அலர்ட்! கொட்டித் தீர்க்கப்போகும் அதி கனமழை!

Heavy Rain 2026

நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை நாளை முழுமையாக விலக உள்ள சூழலில், தென்னிந்தியாவின் தென் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 4.5 கி.மீ உயரத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் 1.5 கி.மீ உயரத்திலும் என இரண்டு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன.


மேலும், குமரிக்கடல் சுழற்சியில் தொடங்கி மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் வழியாக ஒடிசா கடலோரப் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நீடிக்கிறது. இதன் தாக்கத்தால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கூடிய தீவிர மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

அக்டோபர் 14 (இன்று):

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் அதி தீவிர கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மற்றும் புதுச்சேரியில் பலத்த காற்றுடன் கனமழையும், ஏனைய தமிழகத்தில் மிதமான மழையும் பதிவாகும்.

அக்டோபர் 15 (நாளை):

விருதுநகர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கோவை, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை கொட்டித் தீர்க்கும். டெல்டா மாவட்டங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 16:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, மதுரை, ராமநாதபுரம், டெல்டா பகுதிகள் உட்பட தமிழகத்தின் 28 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று, இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கும்.

அக்டோபர் 17:

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பலத்த இடி மின்னலுடன் கனமழை நீடிக்கும்.

அக்டோபர் 18:

நீலகிரி, கோவை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழையும், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் தொடரும்.

அக்டோபர் 19 & 20:

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை நீடிக்கும். 19-ஆம் தேதி மதுரை, சிவகங்கையிலும், 20-ஆம் தேதி திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : “ஜெயம்மா” கொடுத்த உத்வேகம்!. சமூக சேவை வழியில் ‘தேவரகொண்டா’ குடும்பத்து மருமகள் ராஷ்மிகா!.

Next Post

ரூ.10 கோடி வேண்டாம்; ரூ.5 கோடியே போதும்!. SRH-தான் கெத்து!. டெல்லியை விட்டு வெளியேறி நடராஜன் ரீ-என்ட்ரி!

Wed Oct 14 , 2026
2027-ஆம் ஆண்டிற்கான 20-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு திரும்புகிறார். கடந்த இரண்டு சீசன்களாக டெல்லி அணிக்காக விளையாடி வந்த நடராஜனை பெற்றுக்கொண்டு, பதிலுக்கு சுழற்பந்து வீச்சாளர் ஜிஷான் அன்சாரியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. இந்த மாற்றத்திற்காக நடராஜன் தனது சம்பளத்தில் பெரிய தொகையை […]
Natarajan Returns To SRH 30kb

You May Like