ரூ.10 கோடி வேண்டாம்; ரூ.5 கோடியே போதும்!. SRH-தான் கெத்து!. டெல்லியை விட்டு வெளியேறி நடராஜன் ரீ-என்ட்ரி!

Natarajan Returns To SRH 30kb

2027-ஆம் ஆண்டிற்கான 20-வது ஐபிஎல் தொடருக்கு முன்னதாக, தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு திரும்புகிறார். கடந்த இரண்டு சீசன்களாக டெல்லி அணிக்காக விளையாடி வந்த நடராஜனை பெற்றுக்கொண்டு, பதிலுக்கு சுழற்பந்து வீச்சாளர் ஜிஷான் அன்சாரியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து டெல்லி கேபிடல்ஸ் அணி கைப்பற்றியுள்ளது.


இந்த மாற்றத்திற்காக நடராஜன் தனது சம்பளத்தில் பெரிய தொகையை விட்டுக்கொடுத்துள்ளார். 2025 மெகா ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் ரூ. 10.75 கோடிக்கு வாங்கப்பட்ட நடராஜன், தற்போது 50 சதவீதத்திற்கும் மேல் சம்பளத்தை குறைத்துக் கொண்டு ரூ. 5 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணியுடன் புதிய ஒப்பந்தம் செய்துள்ளார். அதேநேரத்தில், சுழற்பந்து வீச்சாளர் ஜிஷான் அன்சாரி சன்ரைசர்ஸ் அணியில் பெற்று வந்த அதே ரூ. 40 லட்சம் சம்பளத்தில் டெல்லி அணிக்குச் செல்கிறார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க 20-வது ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக உறுதி செய்யப்பட்டுள்ள இரண்டாவது வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். இதற்கு முன்பாக நடைபெற்ற முதல் ஒப்பந்தத்தில் ரிஷப் பண்ட் மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

Next Post

சுடுகாட்டில் கூட போராட்டம் நடத்த அனுமதி இல்லையா? அப்படினா ஐகோர்ட் முன் அனுமதிக்கலாமா? காவல்துறையை வறுத்தெடுத்த நீதிபதி!

Wed Oct 14 , 2026
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலையால் கடுமையான சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி, அப்பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆலையின் மாசுக் கட்டுப்பாட்டு விதிமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுடுகாட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியதாகவும், ஆனால் அந்த விண்ணப்பத்தை காவல்துறை நிராகரித்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். […]
Chennai High Court 2026

You May Like