“ஜெயம்மா” கொடுத்த உத்வேகம்!. சமூக சேவை வழியில் ‘தேவரகொண்டா’ குடும்பத்து மருமகள் ராஷ்மிகா!.

Rashmika Mandanna 30kb

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் முடிந்த பிறகு இணைந்து நடித்துள்ள முதல் படமான ‘ரணபாலி’ (Ranabaali) விரைவில் திரைக்கு வரவுள்ளது. 1876-1878 காலகட்டத்தில் நடந்த மெட்ராஸ் மாகாணப் பஞ்சத்தை பின்னணியாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வீரர் சிங்கனமலா பொப்பிலி ரணபாலி மனைவியான ‘ஜெயம்மா’ என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடித்துள்ளார்.


தாம் ஏற்று நடித்த ஜெயம்மா கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட ராஷ்மிகா, நிஜ வாழ்க்கையிலும் ஒரு அதிரடி நல்ல காரியத்தைச் செய்துள்ளார். ஜெயம்மா கதாபாத்திரம் தனக்கு அளித்த தாக்கத்தால், 400 குடும்பங்களை ராஷ்மிகா தத்து எடுத்துள்ளார்.

அதாவது, ஒவ்வொரு குடும்பத்திற்கும் அடுத்த ஒரு வருடத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும். இந்த உதவியின் மூலம் பொதுமக்கள் தங்களது மளிகைப் பொருள் செலவை மிச்சப்படுத்தி, தங்களது எதிர்கால சேமிப்பிற்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உதவித் தொகுப்பில் 75 கிலோ அரிசி, 10 கிலோ கோதுமை மாவு, 3 கிலோ ராகி, 10 லிட்டர் சமையல் எண்ணெய், 15 கிலோ பருப்பு, 3 கிலோ சர்க்கரை, 3 கிலோ உப்பு மற்றும் அத்தியாவசியமான மசாலாப் பொருட்கள் அடங்கியுள்ளன. தமது இந்த நல்ல காரியத்தை இதுவரை ரகசியமாகவே வைத்திருந்ததாகவும், தனது ரசிகர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்போது இதை வெளிப்படையாக அறிவித்துள்ளதாகவும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்போடு சேர்த்து அனைவரையும் ஆச்சரியப்படுத்திய மற்றொரு விஷயம் அவரது குடும்பப் பெயர் மாற்றம் ஆகும். சமூக வலைதளப் பதிவில் அவர் தனது பெயரை ‘ராஷ்மிகா தேவரகொண்டா’ (Rashmika Deverakonda) என்று குறிப்பிட்டுள்ளார். நீண்ட நாட்களாக ரகசியமாகக் காதலித்து வந்த இவர்களது திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்றது. தற்போது திருமணத்திற்குப் பிறகு அவர் தனது கணவர் விஜய் தேவரகொண்டாவின் குடும்பப் பெயரைத் தனது பெயருடன் இணைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1newsnationuser5

Next Post

நாளை விடைபெறுகிறது.. ஆரம்பமும் ஆகிறது! தமிழகத்துக்கு உச்சக்கட்ட அலர்ட்! கொட்டித் தீர்க்கப்போகும் அதி கனமழை!

Wed Oct 14 , 2026
நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை நாளை முழுமையாக விலக உள்ள சூழலில், தென்னிந்தியாவின் தென் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 4.5 கி.மீ உயரத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் 1.5 கி.மீ உயரத்திலும் என இரண்டு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. மேலும், குமரிக்கடல் சுழற்சியில் தொடங்கி […]
Heavy Rain 2026

You May Like