ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பூண்டு! எப்படி சாப்பிட்டால் பலம் அதிகரிக்கும்?

garlic 11zon

பூண்டு பல நூற்றாண்டுகளாக சமையலறைகளில் சுவைக்காக மட்டுமின்றி சிறந்த இயற்கை மருந்தாகவும் பயன்பட்டு வருகிறது. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், தாமிரம், பொட்டாசியம் மற்றும் செலினியம் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய கனிமங்கள் நிறைந்துள்ளன. பாக்டீரியாக்களை அழிக்கும் ஆற்றல் கொண்ட பூண்டை பச்சையாகவோ அல்லது நெருப்பில் சுட்டு உண்பதோ பல நோய்களை விரட்ட உதவும் என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


குறிப்பாக, இரவில் உறங்க செல்வதற்கு முன் இரண்டு அல்லது மூன்று சுட்ட பூண்டு பற்களை சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை முழுமையாக வெளியேற்ற உதவுகிறது. பூண்டை சாப்பிட்ட பின் சில மணி நேரங்களுக்கு வேறு எந்த உணவும் உட்கொள்ளாமல் இருந்தால், அது சிறுநீர் வழியாக நச்சு கழிவுகளை எளிதில் வெளியேற்ற துணைபுரிகிறது. மேலும், இதில் உள்ள சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்தி, முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் போன்ற முதுமையின் அறிகுறிகளை குறைத்து இளமையை தக்கவைக்க உதவுகிறது.

ஆண்களுக்கு ஏற்படும் உடல் பலவீனத்தை போக்கி பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் சுட்ட பூண்டு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள துத்தநாகம், மாங்கனீசு மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து கருவுறுதல் திறனை மேம்படுத்துகின்றன. அத்துடன், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுத்து கெட்ட கொழுப்பை குறைப்பதால் இதய நலன் பாதுகாக்கப்படுகிறது. மேலும், உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டி செரிமானத்தை விரைவுபடுத்துவதன் மூலம் இயற்கையாக உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.

Read More : ரேஷன் கார்டில் புதிய பெயர் சேர்ப்பது எப்படி? வீட்டிலிருந்தே வேலையை முடிக்கலாம்! முழு விவரம் உள்ளே!

You May Like