தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பு.. இம்ரான் கானுக்கு அடுத்த சிக்கல்!

8252b9b74ca5a0c91f0d97a7cc16fe501a49c945fa02ed8d360868384c9191d3

அமீர் கானின் உறவினரும் பாலிவுட் நடிகருமான இம்ரான் கானை அக்டோபர் 28ஆம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு மும்பை போலீசார் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதைத் தொடர்ந்து இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது. எனினும், போலீசார் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.


வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) உள்ளிட்ட தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இந்தச் சூழலில், அக்டோபர் 10ஆம் தேதி மும்பையின் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் இம்ரான் கான் கலந்துகொண்டார்.

அவருடன் நடிகையும் காதலியுமான லேகா வாஷிங்டன், உறவினரான ஜெய்ன் மேரி கான் ஆகியோரும் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது மூவரையும் மும்பை போலீசார் தடுப்புக் காவலில் எடுத்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இம்ரான் கானுக்கு எதிராகக் குடியேற்ற விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் பரவியுள்ளது.

இம்ரான் கான் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர் என்பதால், இந்தியாவில் அவர் தங்குவதற்கான அனுமதி மற்றும் குடியேற்ற விதிகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அக்டோபர் 28ஆம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், போராட்டத்தில் பங்கேற்றதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா, அல்லது குடியேற்ற விதிகள் தொடர்பான வேறு காரணங்கள் உள்ளனவா என்பது இன்னும் தெளிவாகவில்லை. மும்பை போலீசாரின் அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகாத நிலையில், இம்ரான் கான் விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Also Read: அதிர்ச்சி!!! 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரோபோ..

Saranya

Next Post

பள்ளியின் மேற்கூரை திடீர் சரிவு.. 29 குழந்தைகள் உட்பட 30 பேர் பலி!

Thu Oct 15 , 2026
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தனியார் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 29 சிறுவர்கள் மற்றும் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மாணவர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத் தலைநகரான பெஷாவரில் உள்ள திர் காலனி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வியாழக்கிழமை பள்ளியில் மாணவர்கள் இருந்தபோது கட்டிடத்தின் மேற்கூரை திடீரென […]
death n

You May Like