தீவிரமடையும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல்! இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்! தமிழக அரசு முக்கிய உத்தரவு!

FEVER

தமிழகத்தில் சமீப நாட்களாக ‘இன்ஃப்ளூயன்ஸா’ வைரஸ் காய்ச்சல் பரவல் வேகமாக அதிகரித்து வரும் சூழலில், நோயாளிகளின் பாதிப்புத் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தி சிகிச்சை அளிக்குமாறு அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் தணிந்த பின்னரும் கூட, ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் உடல்வலி மற்றும் வறட்டு இருமல் நீடிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. பரவும் வேகம் மற்றும் பாதிப்பின் தீவிரம் அதிகமாக இருப்பதால், வைரஸின் வீரியம் அதிகரித்திருக்கலாமோ என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இருமல் மற்றும் தும்மல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதில் பரவக்கூடிய இந்த தொற்றால் முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் நாள்பட்ட நோய் உள்ளவர்கள் தீவிர பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நோயாளிகளை மூன்று வகையாகப் பிரித்து சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. லேசான காய்ச்சல், தொண்டை வலி, உடல்வலி உள்ளவர்கள் எவ்வித தீவிர பரிசோதனைகளும் இன்றி, மருத்துவரின் ஆலோசனையோடு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வெடுத்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், அதிக பாதிப்புக்கு வாய்ப்புள்ள முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோயாளிகளுக்கு ‘ஓசல்டாமிவிர்’மருந்துகளை பரிந்துரைக்கவும், தீவிர மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, சளியில் ரத்தம் கலந்து வருதல் அல்லது மயக்க நிலை போன்ற அறிகுறிகள் உள்ளவர்களை உடனடியாக உள்நோயாளிகளாக அனுமதித்து சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்தகைய வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளை எதிர்கொள்ள தேவையான ‘அசித்ரோமைசின்’, ‘ஓசல்டாமிவிர்’ உள்ளிட்ட 320 வகையான அத்தியாவசிய மருந்துகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

Read More : குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகள் இயங்கும்! உணவுத்துறை அறிவிப்பு!

Next Post

புரட்டாசி கடைசி சனிக்கிழமை இதை மட்டும் செய்தால் போதும்! முழு பலன்களும் கிடைக்கும்!

Fri Oct 16 , 2026
இந்து சமய வழிபாட்டில் பெருமாளின் திருவருளைப் பெறுவதற்குரிய உன்னதமான மாதமாக புரட்டாசி மாதம் போற்றப்படுகிறது. இம்மாதத்தின் அனைத்து நாட்களும் சிறப்புமிக்கவை என்றாலும், இதில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து வழிபடுவது மகத்தான பலன்களைத் தரும். பெருமாளின் அருளைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், சனி பகவானின் கெடுபலன்கள் மற்றும் ஏழரைச் சனி தோஷங்களில் இருந்து விடுபட்டு அவரின் அருளாசியைப் பெறவும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடே மிக சிறந்த நாளாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து தளிகை […]
Perumal 2026

You May Like