ஒரு கிலோ அரிசி ரூ.30 தானா? துவரம் பருப்பு இவ்வளவு கம்மியா? எங்கு தெரியுமா? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

Maligai 2026

உலகளாவிய காரணிகள் மற்றும் எல்-நினோ தாக்கத்தால் வெளிச்சந்தையில் அரிசி மற்றும் பருப்பு விலை உயர்ந்துள்ள சூழலில், பொதுமக்களின் சுமையைக் குறைக்க சன்ன ரக அரிசியை கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை விரிவான செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.


அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் (Universal PDS) கீழ் முன்னுரிமை, முன்னுரிமை அல்லாத மற்றும் அந்தியோதயா அட்டைதாரர்கள் என சுமார் 2.29 கோடி குடும்ப அட்டைகளில் உள்ள 7.01 கோடி பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் தடையின்றி விநியோகிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஓராண்டுக்குத் தேவையான அரிசியும், அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான சர்க்கரை, பாமாயில் மற்றும் பருப்பு இருப்பும் தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் எல்-நினோ விளைவால் சாகுபடி பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும். இதனை சமாளிக்க, முதல்கட்டமாக 25,000 மெட்ரிக் டன் சன்ன ரக அரிசி 201 கூட்டுறவு கடைகள் மற்றும் 49 அமுதம் அங்காடிகள் வாயிலாக கிலோ ரூ.30-க்கு இந்த வார இறுதியில் இருந்து விற்பனைக்கு வரவுள்ளது. பொதுமக்கள் தங்களின் தேவைக்கேற்ப 5 கிலோ வரை வாங்கிக் கொள்ளலாம். மேலும், NAFED மூலம் 500 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டு, கிலோ ரூ.130 விலையில் 250 கூட்டுறவு மற்றும் அமுதம் அங்காடிகளில் விநியோகம் செய்யப்படுகிறது.

மாவட்ட அளவில் விலை மாற்றங்களை கண்காணிக்கவும் பதுக்கலைத் தடுக்கவும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதுக்கலில் ஈடுபடுவோர் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக கிலோ ரூ.65 வரை உயர்ந்த வெங்காயம் ரூ.35-க்கு விற்கப்பட்டதைப் போல, அரிசி, பருப்பு, உளுந்து, மிளகாய், பூண்டு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களும் வெளிச்சந்தை விலையை விட குறைவாக தொடர்ந்து விநியோகிக்கப்படும் என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

Read More : குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! ஞாயிற்றுக்கிழமையும் ரேஷன் கடைகள் இயங்கும்! உணவுத்துறை அறிவிப்பு!

Next Post

மூட்டுகளில் ஊசி குத்துவது போல் வலியா? சிறுநீரகத்துக்கு ஆபத்து? எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்!

Fri Oct 16 , 2026
மனித உடலில் ‘பியூரின்’ (Purine) எனப்படும் புரதச்சத்து செரிமானமாகும் போது இயற்கையாக உருவாகும் ஒரு கழிவுப் பொருளே யூரிக் அமிலம். இயல்பாகவே இதனை சிறுநீரகங்கள் பிரித்து சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும். ஆனால், உடலில் இதன் உற்பத்தி அதிகரிக்கும் போதோ அல்லது சிறுநீரகங்கள் இதனை சீராக வெளியேற்றத் தவறும் போதோ ரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு கூடுகிறது. மருத்துவத்தில் இது ‘ஹைப்பர்யூரிக்மியா’ (Hyperuricemia) எனப்படுகிறது. இவ்வாறு தேங்கும் அதிகப்படியான அமிலம் கூர்மையான […]
leg

You May Like