கானா இசைக்கு மகுடம் சூட்டிய ‘தேனிசை தென்றல்’ தேவா மறைவு!. தாளங்கள் ஓய்ந்தாலும் அழியாத ராகங்கள்!

Deva Dies 30kb

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும், ‘தேனிசைத் தென்றல்’ என்று அன்போடு அழைக்கப்படும் தேவா (75), சென்னையில் இன்று (அக்டோபர் 17, சனி) காலமானார். திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு தமிழ் திரையுலகிலும், ரசிகர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தேவா அவர்கள் தேவனேசன் சொக்கலிங்கம் என்ற பெயரில் நவம்பர் 20, 1950 அன்று பிறந்தார். இவர் 1989-ல் வெளியான ‘மனசுக்கேத்த மகராசா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்; அதனைத் தொடர்ந்து வெளியான ‘வைகாசி பொறந்தாச்சு’ படம் இவருக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், தமிழ் சினிமாவில் கானா இசையை உச்சத்திற்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் ஆவார்.

‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’, ‘ஆசை’, ‘காதலுக்கு மரியாதை’, ‘வாலி’, ‘குஷி’ மற்றும் ‘நேருக்கு நேர்’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றார். புகழ்பெற்ற இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இவருக்கு ‘தேனிசைத் தென்றல்’ என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்ததுடன், இவர் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதும், 1992-ல் ‘கலைமாமணி’ விருதும் பெற்றுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 1992-ல் வெளியான ‘அண்ணாமலை’ படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற “சூப்பர் ஸ்டார் ரஜினி” டைட்டில் கார்டு பின்னணி இசையை உருவாக்கியவர் தேவாதான். ரஜினியின் மாஸ் என்ட்ரிக்கு பல ஆண்டுகளாக இன்றும் அந்த BGM முக்கிய பங்கு வகிக்கிறது. சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர் 2’ படத்திலும் அவரது ‘பாட்ஷா’ பிஜிஎம் டைட்டில் கார்டில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தேவாவின் குடும்பம் முழுவதும் இசையுடனே ஆழமாகப் பிணைந்துள்ளது. இவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவா திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். தேவாவின் சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளி ஆகியோர் ‘சபேஷ் – முரளி’ என்ற பெயரில் இணை இசையமைப்பாளர்களாகப் பணியாற்றிப் பல வெற்றிப் படங்களை அளித்தவர்கள்; இவர்களில் சபேஷ் கடந்த ஆண்டு (அக்டோபர் 23, 2025) தனது 68-வது வயதில் காலமானார். மேலும், ‘பகவதி’, ‘சென்னை 600028’, ‘சுப்பிரமணியபுரம்’ போன்ற படங்களின் மூலம் புகழ்பெற்ற பிரபல நடிகர் ஜெய், தேவாவின் சகோதரரின் மகனும் ஆவார். கலைக்குடும்பத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் தேவா அவர்களின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

ஐபிஎல் 2027!. மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார் மஹிலா ஜெயவர்த்தனே!.

Sat Oct 17 , 2026
வரவிருக்கும் ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மஹிலா ஜெயவர்த்தனே விலகியுள்ளார். அணியும் அவரும் பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் தங்களது வழிகளைப் பிரித்துக் கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சுமார் ஒரு தசாப்த கால நீண்ட நெடிய தொடர்பைக் கொண்டிருந்த ஜெயவர்த்தனேவின் இந்த திடீர் முடிவு, அணியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஐபிஎல் 2026 […]
Mahela Jayawardene 30kb

You May Like