மீசையுடன் பிறந்த குழந்தை?. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ!. பின்னணி என்ன?

moustache Baby 30kb

ஈக்வடார் நாட்டில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று அடர்ந்த மீசையுடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு வயதான முதியவர் போல் தோற்றமளிக்கும் இந்த குழந்தையின் வீடியோ, இணையத்தில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளதுடன், இது உண்மையானதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.


கர்ப்ப காலத்தில் உருவாகும் ‘லானுக்கோ’ எனப்படும் மென்மையான முடிகள் சில குழந்தைகளிடம் காணப்படுவது இயல்புதான். பொதுவாக முதுகு, தோள், காதுகள் மற்றும் முகப் பகுதிகளில் இந்த முடிகள் இருப்பதுண்டு, அது பிறந்த சில நாட்களில் தானாகவே மறைந்துவிடும்.

ஆனால், இந்த லானுக்கோ முடிகள் மிகவும் மெல்லியதாகவும், நிறமிகள் அற்றதாகவும் இருக்கும். அது ஒருபோதும் இந்த வீடியோவில் உள்ளது போல் அடர்ந்த, பெரியவர்களின் மீசை போல இருக்காது. மேலும், இது போன்ற ஒரு மருத்துவ நிகழ்வுக்கான எந்தவொரு நம்பகமான ஆவணங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோவை பார்த்த சமூக வலைத்தள பயனர்கள் பலரும் பல்வேறு கேலி கலந்த கிண்டல் கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர். “இந்தப் பையன் எல்கேஜிக்குச் செல்லாமல் நேரடியாக மிட்கோர் முதிர்ச்சிக்கு சென்றுவிட்டான்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், “இவர் பிறந்தபோதே மூன்று குழந்தைகளுக்கும், இரண்டு அடமானக் கடன்களுடனும் ஓய்வு பெற்றவர் போல் இருக்கிறார்” என்று கிண்டல் செய்துள்ளார். குழந்தைக்கு வயது 2 மணி நேரம்தான் ஆகிறது, அதற்குள் அலுவலக வேலை பார்த்து அலுத்துப் போனவர் போல் முகம் வைத்துள்ளார்” என்று மற்றொருவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த குழந்தையின் முகத்தை வைத்து பல்வேறு ஃபன்னியான மார்பிங் புகைப்படங்களையும் நெட்டிசன்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர். சிலர் அவரை ‘சுப்ரீம் லீடர்’ போன்ற இராணுவ சீருடையிலும், வேறு சிலர் பிசினஸ் மேன் கோலத்திலும், மாரியோ (Mario) கெட்டப்பிலும் எடிட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

இது உண்மையானதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

இந்த வீடியோவை ஆய்வு செய்த பல நிபுணர்கள், இது டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்ட போலியான வீடியோ என்று உறுதிப்படுத்தியுள்ளனர். குழந்தையின் அசைவுகளுக்கு ஏற்ப மீசை இயல்பாக நகராமல், சற்று பிழைகளுடன் தெரிவது இதற்கான முக்கிய சான்றாகும்.

மேலும், மருத்துவமனை அறையின் வெளிச்சம் மற்றும் நிழல்களுக்குப் பொருந்தாத வகையில் அந்த மீசையின் தோற்றம் உள்ளது. இத்தகைய குழந்தை பிறந்ததற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ மருத்துவமனை அல்லது குடும்பத்தினரின் தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

வழக்கமான மருத்துவமனை ஒன்றில் பிறந்த நிஜக் குழந்தையின் முகத்தில், AI பேஸ்-மேப்பிங் ஃபில்டர் (AI face-mapping filter) அல்லது எடிட்டிங் டூல்களைப் பயன்படுத்தி இந்த மீசை சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser5

You May Like