“ஐயோ அண்ணி.. கடிக்காதீங்க!” கதறிய கொழுந்தன்.. அந்தரங்க உறுப்பைக் கடித்ததால் 55 தையல்கள்!

1934fde810a4deaa4ee49b6cbb2bc0f2 1

உத்தரப் பிரதேசத்தில் சிறுவன் ஒருவனைத் தாக்கிய விவகாரத்தில் ஏற்பட்ட குடும்பத் தகராறு, எதிர்பாராத வன்முறையில் முடிந்துள்ளது. சிறுவனின் தாய்க்கும் அவரது கொழுந்தனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது, 37 வயது நபரின் அந்தரங்க உறுப்பைக் கடித்து அண்ணி காயப்படுத்தியுள்ளார். படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் 55 தையல்கள் போடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கான்பூர் மாவட்டம் சஜிதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ராம்ஸ்வர்ரூப் என்பவருக்கு புஷ்பராஜ், ரஜ்னேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் புஷ்பராஜின் மனைவி காயத்ரி. இளைய மகனான 37 வயது ரஜ்னேஷின் மனைவி சுமன். இரு குடும்பத்தினரும் அருகருகே வசித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று புஷ்பராஜின் மகன், தனது சித்தப்பா ரஜ்னேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ரஜ்னேஷ் சிறுவனைத் தாக்கியுள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன் தனது தாயிடம் சென்று நடந்ததைக் கூறியுள்ளார்.

மகன் தாக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த காயத்ரி, அவரை அழைத்துக்கொண்டு ரஜ்னேஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு தனது மகனைத் தாக்கியது குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ரஜ்னேஷ் காயத்ரியைத் தாக்க முயன்றுள்ளார். அப்போது அவரது காலை இழுத்ததால் ரஜ்னேஷ் கீழே விழுந்துள்ளார். அந்த நேரத்தில் காயத்ரி அவரது அந்தரங்க உறுப்பைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளார். வலியால் அவர் அலறியதைக் கேட்ட அவரது தந்தை ராம்ஸ்வர்ரூப் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக அங்கு வந்து அவரை மீட்டனர்.

காயமடைந்த ரஜ்னேஷ் முதலில் காதம்பூர் சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காகக் கான்பூரில் உள்ள உர்சூலா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குக் காயத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு 55 தையல்கள் போடப்பட்டுள்ளன. தற்போது அவர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளார்.

இதுதொடர்பாக ரஜ்னேஷின் மனைவி சுமன், காயத்ரிக்கு எதிராக சஜிதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: 40 வயதைத் தாண்டியவர்கள் கவனம்! காலில் திடீர் வலி முதல் சிறுநீரில் ரத்தம் வரை.. இதுதான் முக்கிய காரணம்!

Saranya

Next Post

குட்கா துப்பியபோது எச்சில் வழியாகப் பாய்ந்த 11,000 வோல்ட் மின்சாரம்.. தீப்பற்றி எரிந்த உடல்; 65 வயது முதியவருக்கு நேர்ந்த கொடூரம்!

Mon Oct 26 , 2026
மூன்றாவது மாடி பால்கனியில் நின்று குட்காவைத் துப்ப முயன்ற முதியவர், உயர் மின்னழுத்த மின்கம்பியால் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடுகளுக்கு மிக அருகில் ஆபத்தான நிலையில் சென்ற மின்கம்பிகளை அகற்றக் கோரி ஏற்கெனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கஞ்ச்பசோடா நகரின் காயத்ரி நகர் பகுதியில் இந்தச் சம்பவம் […]
ee7e73639a31dd5c1c82674c69702226ac4c843d8945e8c9f5203ca143e37316

You May Like