திருவனந்தபுரம்: கேரள மாநில அரசின் 2026-27 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் – புத்தாண்டு பம்பர் லாட்டரி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் பரிசாக ஒருவருக்கு ரூ.25 கோடி வழங்கப்பட உள்ளது. இதனால் லாட்டரி வாங்குவோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.கேரள முதலமைச்சர் வி.டி. சதீசன்இன்று(வியாழக்கிழமை) இந்த லாட்டரியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த பம்பர் லாட்டரி, மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.நவம்பர் 28 முதல் டிக்கெட் விற்பனைஇந்த பம்பர் லாட்டரிக்கான ஒரு டிக்கெட்டின் விலை ரூ.450 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28 முதல் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்கள் மற்றும் முகவர்கள் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட உள்ளன.இதற்கான குலுக்கல் 2027 பிப்ரவரி 1ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.பரிசுத் தொகை விவரங்கள்இந்த ஆண்டு பம்பர் லாட்டரியில் மொத்தம் 7,66,992 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- முதல் பரிசு: ஒருவருக்கு ரூ.25 கோடி.இரண்டாம் பரிசு: 24 பேருக்கு தலா ரூ.1 கோடி.மூன்றாம் பரிசு: 24 பேருக்கு தலா ரூ.10 லட்சம்.நான்காம் பரிசு: 24 பேருக்கு தலா ரூ.5 லட்சம்.ஐந்தாம் பரிசு: 108 பேருக்கு தலா ரூ.1 லட்சம்.மற்ற பரிசுகள்: ரூ.500 முதல் ரூ.5,000 வரை.ஆறுதல் பரிசு: 11 பேருக்கு தலா ரூ.1 லட்சம்.



