மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் 7 கல்லூரி மாணவிகளை பலாத்காரம் செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள் மேஜிக் வாய்ஸ் செயலி மூலம் தங்கள் குரலை மாற்றி, தங்கள் ஆசிரியராக நடித்து சிறுமிகளை அழைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியான தகவலின்படி, வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப்பில் இருந்து குரல் மாற்றும் பயன்பாடுகள் பற்றிய தகவல்களை பெற்ற குற்றவாளி பிரஜாபதி தனது உதவியாளர்களுடன் சேர்ந்து குரல் மாற்றும் மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி கல்லூரி மாணவிகளிடம் ஆசிரியர் போன்று பேசியுள்ளனர். உதவித்தொகை சமந்தமாக ஆவணங்கள் கொடுக்க வேண்டும் என மாணவிகளை தனியாக அழைத்துச் சென்றுள்ளனர்.
ரஞ்சனா மேடம் தான் கூப்பிடுகிறார் என நம்பி சென்ற பெண்களை தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் எஸ்டி பிரிவைச் சேர்ந்தவர்கள். ஸ்காலர்ஷிப் கிடைக்கும் கல்லூரிகளை குறிவைத்து குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
ஏழு பெண்களில் நான்கு பேர் புகார் அளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு முக்கிய குற்றவாளியை பிடித்தனர். விசாரணையின் போது, அவர் மேலும் இரண்டு உதவியாளர்களுடன் வேலை செய்வதை வெளிப்படுத்தினார், அவர்களும் விரைவில் கைது செய்யப்பட்டனர்.
ஐஜி ரேவா ரேஞ்ச் மகேந்திர சிங் சிகர்வார் கூறுகையில், விசாரணை தொடரும்போது இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். முக்கிய குற்றவாளியான பிரஜேஷ் பிரஜாபதி (30) மற்றும் அவரது கூட்டாளிகள் ராகுல் பிரஜாபதி மற்றும் சந்தீப் பிரஜாபதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரஜேஷ் பிரஜாபதி இரண்டு முறை திருமணம் செய்து ஒரு மகள் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
ஜோதிகாவின் உடன் பிறந்த சகோதரி நக்மாவா..? அட அவரு இல்லையாமே..!! அப்படினா வேற யாரு..?