மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மக்களவை தொகுதியில் நோட்டாவுக்கு 2-வது இடம் கிடைத்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக மோகன் யாதவ் முதல்வராக உள்ளார். இங்கு மொத்தம் 29 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 29 தொகுதிகளில் பாஜக தனித்து களமிறங்கி உள்ளது. காங்கிரஸ் 28 தொகுதிகளிலும், ஒரு தொகுதியில் அதாவது கஜுராஹோ தொகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியும் போட்டியிட்டுள்ளது.
இந்நிலையில் தான், தேர்தல் வேளையில் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தி தனது வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்தார். அதோடு அக்சய் காந்தியோடு காங்கிரஸ் சார்பில் 3 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவர்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் காங்கிரஸ் வேட்பாளர் இல்லாத நிலை உருவானது. பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி பிற வேட்பாளர்களுடன் மோதினார். இதற்கிடையே தான் காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் காந்தியை திட்டமிட்டு பாஜக தூக்கி உள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், காங்கிரஸை சேர்ந்தவர்கள் நோட்டாவுக்கு ஓட்டளிக்க வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தினர்.
அதன்படி, காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் சமயத்தில் நோட்டாவுக்கு அதிகளவில் ஓட்டளித்துள்ளது தெரியவந்துள்ளது. அதாவது இன்றைய வாக்கு எண்ணிக்கையின் மதியம் 12 மணி நிலவரப்படி பாஜக வேட்பாளர் சங்கர் லால்வானி 8 லட்சத்து 60 ஆயிரத்து 658 ஓட்டுகளை பெற்று முன்னிலையில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக நோட்டா அதிக வாக்குகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது. நோட்டாவுக்கு மொத்தம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 6 ஓட்டுகள் கிடைத்துள்ளது. நோட்டாவுக்கு அடுத்தப்படியாக பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் லட்சுமண் 37,127 ஓட்டுகளுடன் 3வது இடத்தில் உள்ளார். நோட்டா அறிமுகம் செய்யப்பட்டது முதல் அதற்கு ஒரு தொகுதியில் இவ்வளவு ஓட்டு விழுந்தது இல்லை. முதல் முதலாக நோட்டோவுக்கு இந்தூர் லோக்சபா தொகுதியில் தான் லட்சத்தை தாண்டி 1.51 லட்சம் ஓட்டுகள் விழுந்துள்ளது.
Read More : தமிழ்நாட்டில் தடம் பதிக்க தொடங்கிய பாஜக..!! சற்றும் எதிர்பாராத அதிமுக..!! ஷாக்கிங் முடிவுகள்..!!