fbpx

இளைஞர்களே..!! இந்த விதை பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!! இதயத்திற்கு ரொம்ப நல்லது..!!

சியா விதை ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. ஆனால், நாம் அதை பெரிதாக பயன்படுத்துவதில்லை. குறிப்பாக, இது உடல் எடையை குறைக்கும் ஒருவகை விதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், தினசரி சியா விதைகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை குறைவது மட்டுமின்றி, உடலில் பல்வேறு வகையான மாற்றங்களையும் உங்களால் உணர முடியும்.

குறிப்பாக, பெண்கள் தினமும் 2 ஸ்பூன் அளவு சியா விதைகளை எடுத்துக் கொண்டால் கீழ்வரும் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

* சியா விதை நமக்குத் தெரியும். பெரும்பாலும் ஜூஸ் கடைகளில் சியா விதைகளைச் சேர்த்துக் கொடுப்பார்கள். ஆனால், இந்த சியா விதையை தினசரி நம்முடைய வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகத்தை போல அத்தியாவசியமாக சாப்பிட வேண்டிய ஒன்று.

* சியா விதையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு என்றாலே அது மீனில் தான் அதிகமாக இருக்கும். சைவ உணவுகளில் மிகக் குறைவான அளவிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. ஆனால், சைவ உணவுகளில் அவகேடோ, ஆலிவ் ஆயில் ஆகியவற்றைப் போன்று சியா விதைகளிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கின்றன.

* சியா விதைகள் ஆண், பெண் இருவருக்குமே உடல் எடையைக் குறைக்க உதவி செய்தாலும், பெண்களுக்கு உடலில் இடுப்பு, தொடை பகுதிகளில் தேங்கும் கொழுப்புகள் கொஞ்சம் கரைய கடினமானதாக இருக்கும். அதுபோன்ற கரையக் கடினமாக இருக்கும் பெண்களின் உடல் கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்க சியா விதை உதவி செய்யும்.

* மலச்சிக்கல் பிரச்சனை பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுவதுண்டு. ஏனெனில், பெண்களுக்கு அதிகமாக நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் நார்ச்சத்துக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அத்தகைய நார்ச்சத்துக்கள் சியா விதையில் மிக அதிகம். அதனால் தினசரி சியா விதைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

* சியா விதையில் நார்ச்சத்துக்கள் அதிகம். அதோடு ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துக்களும் வைட்டமின்களும் மினரல்களும் அதிகம். குறிப்பாக, இதில் கலோரிகளும் மிக மிகக் குறைவு. அதனால் ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டு வர உதவி செய்யும். சியா விதையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் மற்றும் மக்னீசியம் உள்ளிட்டவை இருக்கின்றன. மக்னீசியம் உள்ளிட்ட மினரல்கள் ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவி செய்கிறது.

* இதன்மூலம் ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிதலைத் தடுத்து இதய நோய்கள் ஆபத்தைக் குறைக்க உதவுகிறது. சியா விதைகளில் நார்ச்சத்துக்கள், மினரல்கள், வைட்டமின்கள் ஆகியவை அதிகம். அதேபோல இவற்றில் ஆன்டி – ஆக்சிடண்ட்டுகளும் அதிகம். இந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டுவதோடு இன்ஃபிளமேஷன்களைக் குறைக்கும் வேலையைச் செய்கிறது.

Read More : இளம்பெண் வயிற்றில் குழந்தையின் எலும்புக் கூடு..!! அதிர்ந்து போன மருத்துவர்கள்..!! நடந்தது என்ன..?

English Summary

By consuming chia seeds daily, you will not only lose weight but also experience various changes in your body.

Chella

Next Post

இந்த நாளில் மறந்தும் கூட இந்த தவறை பண்ணிடாதீங்க..!! நிம்மதியே போய்விடும்..!!

Wed Sep 4 , 2024
Friday is seen as a day full of divinity..that's why they say to worship all kinds of Gods on Fridays..

You May Like