கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த மாநில அரசு கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதனால், கர்நாடகாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ரூபாய் 3 உயர்ந்துள்ளது. டீசல் விலை ரூபாய் 3.50 உயர்ந்துள்ளது. இதனால், அந்த மாநில மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மாநில அரசின் அறிவிப்பின்படி, கர்நாடக விற்பனை வரி (KST) பெட்ரோல் மீதான 25.92 சதவீதத்தில் இருந்து 29.84 சதவீதமாகவும், டீசல் மீதான 14.3 சதவீதத்தில் இருந்து 18.4 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும் என நிதித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.99.84 ஆகவும், டீசல் விலை உயர்வுக்கு முன் ரூ.85.93 ஆகவும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More : பிரபல நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடியில் முறைகேடு..!! சிபிஐ வலையில் சிக்குகிறார் நடிகை ரோஜா..!!